போகோ தொலைக்காட்சி
போகோ தொலைக்காட்சி என்பது சிஎன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக அதன் சர்வதேச பிரிவின் கீழ் வார்னர்மீடியாவிற்கு சொந்தமான இந்திய நாட்டு கம்பி மற்றும் செய்மதி அலைவரிசை சேவை ஆகும். இது வார்னர்மீடியாவின் இந்திய நாட்டு குழந்தைகளுக்கான அலைவரிசை மற்றும் உள்ளூர் உள்ளடக்கத்தை மட்டுமே ஒளிபரப்புகிறது. இந்த அலைவரிசை சனவரி 1, 2004 ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது. வரலாறுஇந்த அலைவரிசை அதிகாரப்பூர்வமாக சனவரி 1, 2004 அன்று டர்னர் இன்டர்நேஷனல் இந்தியா[2] என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்த போகோ தொலைக்காட்சியில் இயங்குபடம் மற்றும் நேரடி அதிரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இந்தியாவுக்கான ஒரே குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வலைப்பின்னல் ஆகும். இந்த தொலைக்காட்சி பெரும்பாலும் அனிமே, அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் சில இந்திய தொடர்களை ஒளிபரப்பு செய்தது. பின்னர் இந்த அலைவரிசை 2019 முதல் 2020 வரை தனது கவனத்தை இந்திய இயங்குபடத்திற்கு மாற்றியது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia