பொதிகை தொலைக்காட்சி

பொதிகை தொலைக்காட்சி
பொதிகை சின்னம்
ஒளிபரப்பு தொடக்கம் ஏப்ரல் 14, 1993
உரிமையாளர் தூர்தர்சன்
நாடு  இந்தியா
துணை அலைவரிசை(கள்) டிடி இந்தியா
டிடி செய்திகள்
டிடி விளையாட்டுக்கள்
டிடி பாரத்
வலைத்தளம் http://www.ddpodhigai.org.in/
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
அலைமருவி மீ மிகு அலைவெண் பட்டை
செயற்கைக்கோள்
ஏர்டெல் எண்மத் தொலைக்காட்சி (இந்தியா) அலைவரிசை 300
பிக் டிவி (இந்தியா) அலைவரிசை 453
டைரெக்டிவி (ஐ.அ.) அலைவரிசை 2025
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 606
டாடா ஸ்கை (இந்தியா) அலைவரிசை 801
டிடி டைரக்ட்+(இந்தியா) அலைவரிசை 101
விடியோகான் டி2எச்(இந்தியா) அலைவரிசை 104
வியட்பாவ் CATV வியட்நாம் அலைவரிசை 37
டயலாக் டிவி இலங்கை அலைவரிசை 52
சன் டைரக்ட் அலைவரிசை 101
மின் இணைப்பான்
காம்காஸ்ட் (ஐ.அ.) அலைவரிசை 246
காக்ஸ் கம்யூனிகேசன்ஸ் (ஐ.அ.) அலைவரிசை 272
விடியோடிரான் (கனடா) ATN வழியே அலைவரிசை 252
ரோஜர்ஸ் கேபிள் (கனடா) அலைவரிசை 583
இ-விசன் அலைவரிசை 52
குளோபல் டெஸ்டனி கேபிள் (பிலிப்பைன்) அலைவரிசை 88
ஹாட் (இசுரேல்) அலைவரிசை 161
ஐஓ டிஜிட்டல் கேபிள் சர்வீஸ் (ஐ.அ.) அலைவரிசை 245
டைம் வார்னர் (ஐ.அ.) மாறுகின்ற அலைவரிசைகளில்
யூபிசி அயர்லாந்து (அயர்லாந்து) அலைவரிசை 808
வர்ஜின் மீடியா டெலிவிசன் (ஐக்கிய இராச்சியம்) அலைவரிசை 809
கேபிள் டிவி ஆங்காங் (ஆங்காங்) அலைவரிசை 144
சிக்கோ (நெதர்லாந்து) அலைவரிசை 655
கேபிள்நெட் (மாலத்தீவுகள்) அலைவரிசை 33
ஹாத்வே (இந்தியா) அலைவரிசை 6
IPTV
நௌ டிவி ஆங்காங் அலைவரிசை 798
வெர்ல்ட் ஆன் டிமாண்ட் யப்பான் அலைவரிசை 731

பொதிகை தொலைக்காட்சி அல்லது டிடி 5 தூர்தர்சன் வழங்கும் அலைவரிசைகளில் முதன்மையானதும் இந்தியாவில் தரைவழி தொலைக்காட்சிகளில் மிக பரவலாக கிடைக்கின்ற ஓர் அலைவரிசையும் ஆகும்[1].

வரலாறு

அரசுத்துறை தொலைக்காட்சி நிறுவனமாகிய தூர்தர்சன் பல்வேறு மொழிகளுக்காகத் தனித்தனி செயற்கைக்கோள் அலைவரிசைகளை அறிமுகப்படுத்தியபோது சென்னை மண்டலத்தில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளுக்காக ஏப்ரல் 15, 1993ஆம் ஆண்டு “டிடி-5" என்ற தொலைக்காட்சி பிணையத்தை நிறுவியது. இதன் சேவைகள் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பார்க்கப்படுகிறது. எண்களுக்கு மாறாக உள்ளூர் பெயர்களைக் கொடுக்கும் தூர்தர்சனின் கொள்கையின்படி பார்வையாளர்களிடமிருந்து பொருத்தமான பெயர் ஒன்றை பரிந்துரைக்க வேண்டப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ் பிறந்ததாகக் கருதப்படும் பொதிகை மலையினை ஒட்டி "டிடி பொதிகை " என தமிழர் திருநாள் சனவரி 15,2000இல் மறுபெயரிடப்பட்டது.

நிகழ்ச்சிகள்

காலை வணக்கம், நெடுந்தொடர்கள், அரட்டை மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சிகள், செய்திகள், செவ்வியல் இசை நிகழ்ச்சிகள் என பலவகைப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகிறது. அரசுத்துறை நிறுவனமாதலால் அரசின் கொள்கைகளுக்கேற்ப சமூக நலம் பயக்கும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. குறைந்த செலவில் தயாரித்து தனியார் தொலைக்காட்சிகளுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்திலும் தனித்தன்மை வாய்ந்த தனது நிகழ்ச்சிகளால் பெரும் பார்வையாளர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

வேளாண் மக்களுக்கும் சிற்றூர் மக்களுக்கும் அரசு கொள்கைகளையும் நடப்பு நிலவரங்களையும் கொண்டு செல்ல சிறந்த ஊடகமாகச் செயல்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "India's largest terrestrial network". Associated Press. Archived from the original on 2007-04-06. Retrieved 2007-07-22.

வெளிஇணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya