எசுஎசு மியூசிக்கு
எஸ்எஸ் மியூசிக்கு என்பது 'மீடியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு சொந்தமான இசை செய்மதித் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஏப்ரல் 14, 2001 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசையில் இந்திய மொழி பாடல்களுடன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா பகுதிகளில் இருந்து முக்கிய சர்வதேச இசையையும் ஒளிபரப்புகிறது. 2004 ஆம் ஆண்டில் 'எம்டிவி சவுத்' என அறிமுகப்படுத்துவதற்காக எம்டிவி இந்திய நிறுவனத்தை கையகப்படுத்த அணுகியது, ஆனால் ஒப்பந்தம் தோல்வியடைந்தது. வரலாறுஎஸ்எஸ் மியூசிக் என்பது 'தெற்கு மசாலா இசை' என்ற அர்த்தம் ஆகும்.[1] இது ஏப்ரல் 14, 2001 அன்று ஒரு தூய இசை பொழுதுபோக்கு அலைவரிசையாக தொடங்கப்பட்டது. ஆங்கிலம் அவர்களின் தொடர்பு மொழியாகவும், முக்கியமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பன்மொழி வடிவத்திலும் முக்கியமாக இந்தியாவின் தென்னிந்திய மக்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia