குர்கான் மக்களவைத் தொகுதி (Gurgaon Lok Sabha constituency) என்பது வட இந்திய மாநிலமானஅரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1952 முதல் 1977 வரை செயல்பாட்டில் இருந்தது. பின்னர் 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக மீண்டும் 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. முந்தைய மகேந்திரகர் மக்களவைத் தொகுதியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் முந்தைய பரிதாபாத்து மக்களவையின் தொகுதியின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுடன் இணைத்து குருகிராமம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.[1]