கூத்தாநல்லூர்
மக்கள்தொகை பரவல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 6,025 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 25,423 ஆகும். அதில் 12,162 ஆண்களும், 13,261 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.22% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1090பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2758 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 44.83%, இசுலாமியர்கள் 53.14% , கிறித்தவர்கள் 1.87% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[4] ஊர் வரலாறுசுமார் 350 ஆண்டுகளுக்கு முன் 'சின்னக் கூத்தன்', 'பெரிய கூத்தன்' என்ற இரு பெருநிலக்கிழார்களால் ஆளப்பட்டு வந்த "கூத்தனூர்" என்ற மிகச்சிறிய ஊர். வேளாண்மைத் தொழிலில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. நாளடைவில் பல்வேறு ஊர்களிலிருந்து இங்கு குடியேறிய நமது முன்னோர்களால், "நல்லூர்" என்ற வார்த்தையையும் ஊரின் பெயரோடு சேர்த்து "கூத்தாநல்லூர்" எனும் அழகிய பெயரினைச் சூட்டினார்கள். பின்னாளில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பிழைப்புத் தேடி (விவசாயம்-பயிர் தொழில்) பல இஸ்லாமியக் குடும்பங்கள் இவ்வூரில் வந்து குடியேறினார்கள். சிலர் மார்க்கக் கல்விக்காகவும், வியாபாரம் செய்வதற்காகவும் இவ்வூரை நாடிக் குடியேறினார்கள். அதனால் ஊர் பெரிதாக வளர்ந்தது. அவ்வாறு வந்த குடும்பங்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாழத் துவங்கினார்கள். அவர்கள் தங்களுக்குள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள, தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரினையே தங்களது "குடும்பதின் பட்டப் பெயராக" சூட்டிக்கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள பல பகுதி மக்களின் ஒட்டுமொத்த "மக்களின் கலவையே" இன்றைய கூத்தாநல்லூர். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia