கொரடாச்சேரி
கொரடாச்சேரி (Koradacheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொரடாச்சேரியில் உள்ளது. அமைவிடம்கொரடாச்சேரி பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. கொரடாச்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரஙகள் குடவாசல் 12கி.மீ.; கும்பகோணம் 35 கி.மீ.; மன்னார்குடி 26 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு4.20 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1661 வீடுகளும், 6450 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia