வலங்கைமான்
வலங்கைமான் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டம் மற்றும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வு நிலை பேரூராட்சியும் ஆகும். வலங்கைமானில் நாட்டு வெடிகள் தயாரிக்க படுகிறது. வலங்கைமானில் புகழ்பெற்ற பாடைகட்டி மகா மாரியம்மன் திருக்கோயில் உள்ளது.[4] வலங்கைமான் நகரம் 1 ஜனவரி 1997 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டதிலிருந்து பிரித்து திருவாரூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. அமைவிடம்வலங்கைமான் (தேர்வு நிலைபேரூராட்சி)திருவாரூருக்கு 32 கி.மீ. தொலைவில் உள்ளது. வலங்கைமான் அருகே அமைந்த தொடருந்து நிலையம் கும்பகோணத்தில் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் கும்பகோணம் 9கி.மீ.; மன்னார்குடி 27 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு5.46 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2948 வீடுகளும், 11,754 மக்கள்தொகையும் கொண்டது. [6] [7] மகாமாரியம்மன் கோயில்வலங்கைமான் வரதராஜன்பேட்டையில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த மாரியம்மனைப் பற்றி ஓர் அற்புத வரலாறு வழங்கப்பட்டுவருகிறது. வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர் என்பவர் வசித்துவந்தார். அவர் மனைவி கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக்கவுண்டர் விவசாய வேலை பார்த்துவந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் வியாபாரம் செய்துவந்தார். அவரால் புங்கஞ்சேரி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை 'சீதளா' என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்., வைசூரி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது. மாரியம்மனே குழந்தை வடிவில் வந்ததாக இத்தம்பதியரின் கனவில் தோன்றி ஒரு நாள் அருள் வாக்கு கிடைத்ததால் குழந்தையை நல்லடக்கம் செய்த இடத்திலேயே பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் அங்கு வலது புறமாக ஓடியதால் வலங்கைமான் என்று இவ்வூருக்குப் பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்கைமான் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. பதினைந்து நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் பிரசித்தி பெற்ற பாடைத் திருவிழாவும் (பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு), ஒன்பதாம் நாள் மீன் திருவிழாவும், பதினைந்தாம் நாள் புஷ்பப் பல்லக்கும் (பங்குனி மாதம் மூன்றாம் ஞாயிறு) சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.[8] அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிஇந்த பள்ளியானது வட்டாரத்திலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள். பிரபலங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia