சோலாப்பூர் மாவட்டம்
சோலாப்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் தலைமையகம் சோலாப்பூர் நகரத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பீமா ஆறு பாய்கிறது.[3] இம்மாவட்டத்தின் பண்டரிபுரம் நகரத்தில் புகழ்பெற்ற பாண்டுரங்க விட்டலர் கோயில் உள்ளது. இம்மாவட்டம் சோலாப்பூர் படுக்கை விரிப்பு, பண்டரிபுரம் எருமை மற்றும் பீமா அணைக்கு பெயர் பெற்றது. மாவட்ட நிர்வாகம்
மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 4,315,527 மக்கள் வாழ்ந்தனர்.[4] சதுர கிலோமீட்டருக்குள் 290 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கிடப்பட்டுள்ளது.[4] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 932 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்களில் 77.72% பேர் கல்வி கற்றுள்ளனர்.[4] இங்கு வாழும் மக்கள் மராத்தி, கன்னடம், உருது ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சோளம், கோதுமை, கரும்பு ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். போக்குவரத்துஇங்கு சோலாப்பூர் தொடருந்து நிலையம், மோஹோள், குர்துவாடி, மாதா ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் உள்ளன. சுற்றுலாத் தளங்கள்
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia