கோத்தா பெலுட்
கோத்தா பெலுட் (மலாய்: Pekan Kota Belud; ஆங்கிலம்: Kota Belud Town; சீனம்: 古打毛律) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, கோத்தா பெலுட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 77 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[1] சபாவின் வடக்கு முனையில் உள்ள கோத்தா கினாபாலு மற்றும் கூடாட் நகரங்களை இணைக்கும் கூட்டாட்சி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் உள்ளது. அதே வேளையில், இந்தக் கோத்தா பெலுட் நகரம் கூடாட் பிரிவுக்குச் செல்லும் முக்கிய நகரமாகவும் விளங்குகிறது. இந்த நகரம் அதிகாரப்பூர்வமற்றத் தலைநகராகவும்; மேற்கு கடற்கரையில் பஜாவ் (Bajau) மக்கள் வாழும் மையப் பகுதிக்கான நுழைவாயிலாகவும் கருதப் படுகிறது. பொதுகோத்தா பெலுட் நகரமும்; கோத்தா பெலுட் மாவட்டமும், சபா மாநிலத்தின் மிக அழகான நிலப் பகுதிகளில் ஒன்றாகும். கினபாலு மலையின் அழகியக் காட்சிகளை கோத்தா பெலுட் நகரத்தில் இருந்து பார்க்கலாம்.[2] கோத்தா பெலுட் நிலப் பகுதி, கினபாலு தேசியப் பூங்கா வரை பரந்து விரிந்து உள்ளது. கோத்தா பெலுட் கடற்கரையோரப் பகுதிகள், பஜாவு மக்களின் வாழ்விடமாகக் கருதப் படுகிறது. கோத்தா பெலுட் உட்புறப் பகுதிகளில் டூசுன் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கோத்தா பெலூட் திறந்தவெளிச் சந்தைகோத்தா பெலூட்டின் மக்கள் தொகை, பஜாவ் - சாமா (Bajau-Sama); டூசுன் (Dusun) மற்றும் இலானும் (Illanun) இனக் குழுகளிடையே இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. சீனர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்; முக்கியமாக ஹக்கா இனத்தைச் சேர்ந்த மக்கள்.[1] ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கோத்தா பெலூட்டில் நடைபெறும் திறந்தவெளிச் சந்தைக்குப் பெயர் பெற்றது. தாமு (Tamu) என்று பெயர். ஆண்டுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவிலும் தாமு நடைபெறுகிறது.[2] சொற்பிறப்பியல்கோத்தா பெலுட் எனும் பெயர் பஜாவ் மொழியில் இருந்து வந்தது. "கோத்தா" என்றால் கோட்டை; "பெலுட்" என்றால் மலை என்று பொருள். எனவே, கோத்தா பெலுட் என்றால் "மலையில் உள்ள கோட்டை" என்று பொருள் படுகிறது.[3] முன்னோர்களின் கதைகளின்படி, பழங்காலத்தில் இனங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே பகைகள் இருந்தன. அந்த வகையில் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த, அவர்கள் தஞ்சம் அடைவதற்கு பாதுகாப்பான ஓர் இடத்தை நாடினர். பஜாவ் மக்கள் ஒரு மலையைத் தற்காப்பு நகரமாகத் தேர்ந்து எடுத்தார்கள். அந்த மலைக்குக் கோத்தா பெலுட் என்று பெயர் வைத்தார்கள். அவ்வாறுதான் கோத்தா ப்பெயர் வந்தது.[3] காட்சியகம்
மேற்கோள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia