தீபகற்ப மலேசியாவில்மாவட்டம் என்பது மாநிலத்தின் ஒரு துணைநிலைப் பிரிவாகும். மாநிலத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ள ஒரு நிருவாக அலகைக் குறிக்கும்.
மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[2]ஆங்கிலம்: (District), மலாய் மொழியில்(Daerah) என்று அழைக்கப் படுகின்றது. கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் சாஜகான்(Jajahan) என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கு மலேசியாவில் ஒரு பெரிய மாவட்டத்தை பிரிவு அல்லது கோட்டம் (Division, டிவிசன்) என்று அழைக்கிறார்கள். அந்தக் கோட்டத்தின் கீழ் பல சிறுமாவட்டங்கள் வருகின்றன.[3] ஒரு மாநிலத்தைக் கோட்டங்களாகப் பிரித்து, அந்தக் கோட்டங்களை மாவட்டங்களாகப் பிரித்துள்ளார்கள்.
ஒரு மாவட்டம் என்பது ஒரு கோட்டத்தில் ஒரு துணைக் கோட்டமாகும்.[4]சபா மாநிலத்தில் ஐந்து கோட்டங்கள் உள்ளன. அந்த ஐந்து கோட்டங்களையும் 25 மாவட்டங்களாகப் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.[5]
சரவாக் மாநிலத்தில் 11 கோட்டங்கள் உள்ளன. அவற்றை 29 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[6]