தெலுபிட்
தெலுபிட் (மலாய்: Pekan Telupid; ஆங்கிலம்: Telupid Town; சீனம்: 兵南邦 மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவு, தெலுபிட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 217 கி.மீ. தொலைவிலும்; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1842 கி.மீ. தொலைவிலும் உள்ளது. முன்பு பெலூரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் இருந்தது. வரலாறுதெலுபிட் மாவட்டத்தில் முதன்முதலில் 1940-ஆம் ஆண்டுகளில் முதல் குடியேற்றம் நடந்து உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது சண்டாக்கான் மரண அணிவகுப்பிற்கான (Sandakan Death Marches) முக்கியப் பாதையாகவும் இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளில், இந்த மாவட்டத்தில் டூசுன் மக்கள் அதிகமாக வசித்து வந்தனர். 1965-இல், மலேசியாவின் ஒரு பகுதியாக சபா மாறிய சிறிது காலத்திலேயே தற்போதைய மாவட்டம் உருவாக்கப்பட்டது.[1] சண்டக்கான் கோத்தா கினபாலு நெடுஞ்சாலைத் திட்டம்1968-ஆம் ஆண்டில், கொழும்புத் திட்டத்தின் கீழ், ஆஸ்திரேலியா அரசாங்கமும்; மலேசிய அரசாங்கமும் இணைந்து சண்டக்கான் நகரத்தையும் கோத்தா கினபாலு நகரத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையை அமைக்க ஓர் ஒப்பந்தம் (Malaysian-Australian Road Project) செய்தன. 1978-இல் அந்தத் திட்டம் முடிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சபாவின் மேற்கு கடற்கரைக்கும் மற்றும் கிழக்கு கடற்கரைக்கும் இடையிலான போக்குவரத்தை எளிதாக்கியது. 2017-ஆம் ஆண்டு முதல், சபா மாநில மாவட்டங்களின் கடற்கரைகளுக்கு இடையிலான இடைநிறுத்தப் புள்ளியாக இந்த நகரம் மாற்றம் கண்டது. அதன் தொடர்ச்சியாக இந்த நகரம் அதிக வளர்ச்சி கண்டு வருகிறது.[2] தெலுபிட் மாவட்ட நகராட்சிநெடுஞ்சாலை அமைக்கப் பட்டததைத் தொடர்ந்து, பல உள்கட்டமைப்புகள் அங்கு தொடக்கப் பட்டன. 1970-இல் ஐக்கிய சபா தேசிய அமைப்பின் (United Sabah National Organisation) (USNO) நிர்வாகத்தின் கீழ், தெலுபிட் ஒரு துணை மாவட்டமாக மாற்றப்பட்டது.[3] 2015-ஆம் ஆண்டில், தெலுபிட் ஒரு முழு மாவட்டமாகத் தகுதி உயர்த்தப்பட்டது அத்துடன் ஒரு மாவட்ட நகராட்சியும் நிறுவப்பட்டது.[4] காலநிலைதெலுபிட் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. அதனால் ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்கிறது.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia