தொங்கோட்
தொங்கோட் (மலாய்: Pekan Tongod; ஆங்கிலம்: Tongod Town; சீனம்: 通神 மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவு, தொங்கோட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1] 1990-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், ஒரு சிறிய நகரமான தொங்கோட் நகரம், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பகுதியாக இருந்தது; மற்றும் முற்றிலும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாமல் இருந்தது. இருப்பினும், மலேசியாவின் ஏழாவது மலேசியா திட்டத்தின் கீழ் (1996 - 2000 Seventh Malaysia Plan), சபாவில் புதிய நகரங்களை உருவாக்குவதற்கான அரசாங்கத் திட்டத்தின் கீழ், தொங்கோட் நகரத்திற்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.[2] சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1763 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[3] தொங்கோட் மாவட்டம்தொங்கோட் மாவட்டம் முதன்முதலில் 1977-ஆம் ஆண்டு கினபாத்தாங்கான் மாவட்டத்தின் துணை மாவட்டமாக (Daerah Kecil) நிறுவப்பட்டது. நிர்வாகப் பொறுப்புகள் கெனிங்காவ் மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் அன்டாவ் (Charles Andau) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் உதவி மாவட்ட அதிகாரியாகவும், கினபாத்தாங்கான் மாவட்டத்தின் மாவட்ட அதிகாரிக்கு துணை அதிகாரியாகவும் இருந்தார். 1 மார்ச் 1999-இல், தொங்கோட் துணை மாவட்டம் ஒரு முழு மாவட்டமாகத் தகுதி உயர்த்தப்பட்டது. 24 மே 1999-இல், ரானாவ் மாவட்டத்தை சேர்ந்த மேத்யூ சேட்டர் (Major Matthew Sator) என்பவர் முதல் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு செயலகக் கட்டடத்திற்குப் பதிலாக ஒரு புதிய நிர்வாகக் கட்டடம் கட்டப்பட்டது. மக்கள்தொகை2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 35,341 ஆகும். தொங்கோட் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 10,052 கி.மீ². இது ஒரு குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும். ஓராங் சுங்கை (Orang Sungai) மற்றும் கடசான்-டூசுன் (Kadazan-Dusun) ஆகிய இரு இனக்குழுக்கள் இந்த மாவட்டத்தில் முதன்மையான இனக்குழுக்களாக உள்ளனர். காலநிலைதொங்கோட் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. அதனால் ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்கிறது.
காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
மேலும் காண்கபுற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia