சபா ஆளுநர்
யாங் டி பெர்துவா சபா (ஆங்கிலம்: Sabah Governor; மலாய்: Yang di-Pertua Negeri of Sabah) என்பது மலேசிய மாநிலமான சபா மாநிலத்தின் கவர்னர் (Governor) எனும் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி. யாங் டி பெர்துவா என்பவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம். சபா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஜுகார் மகிருடின் (Juhar Mahiruddin). இவர் 2011 சனவரி 1-ஆம் தேதி பதவியேற்றார். நியமனம்சபா மாநிலத்தின் அரசியலமைப்பின் பிரிவு 1 (1)-இன் கீழ் (Article 1 (1) of the Constitution) யாங் டி பெர்துவா நெகிரி (ஆளுநர்) பதவி நிறுவப்பட்டது. சபா மாநிலத்தின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு, மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் இந்தப் பதவிக்கான ஆளுநர் நியமிக்கப் படுகிறார்.[2] யாங் டி பெர்துவா சபா ஆளுநருக்கு துணை ஆளுநர்; அல்லது உதவியாளர் எவரும் இல்லை. இருப்பினும், நோய் அல்லது உடல்நலப் பாதிப்பு காரணமாக சபா மாநிலத்தை ஆட்சி செய்ய இயலாமல் போனால், அவரின் செயல்பாட்டைத் தொடர்வதற்கு, வேறு ஒரு நபரை நியமிக்கும் அதிகாரத்தை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள் பெற்று உள்ளார். பொதுயாங் டி பெர்துவா நெகிரி (ஆங்கிலம்: Yang di-Pertua Negeri; மலாய்: Yang di-Pertua Negeri) என்பது; மலேசிய மாநிலங்களான பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி. இந்தப் பதவி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படும் பதவி ஆகும். இருப்பினும், யாங் டி பெர்துவா நெகிரியின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அதிகாரம் மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களிடம் மட்டுமே உள்ளது. சபா மாநிலத்தின் முதல்வரின் சம்மதத்தைப் பெற்ற பின்னர் தான், யாங் டி பெர்துவா நெகிரி நியமிக்கப் படுகிறார்கள்.[3] அதிகாரங்கள்யாங் டி பெர்துவான் அகோங் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போல சபா மாநில யாங் டி பெர்துவா நெகிரிக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இருப்பினும் நீதித் துறையில் சபா மாநில யாங் டி பெர்துவா நெகிரிக்கு குறைந்த அளவு அதிகாரங்களே வழங்கப்பட்டு உள்ளன. ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவா நெகிரி, அந்த மாநிலத்தின் தலைவராகப் பொறுப்பு வகிப்பதால், அவர் மலேசிய மன்னர்கள் மாநாட்டில்; (ஆங்கிலம்: Conference of Rulers அல்லது Council of Rulers அல்லது Durbar; மலாய்: Majlis Raja-Raja ஜாவி: مجليس راج); கலந்து கொள்ள முடியும். தனிப்பட்ட விருப்பங்கள்ஆனால், மலேசியாவின் மாமன்னராகும் அதிகாரம் மட்டும் ஒரு யாங் டி பெர்துவா நெகிரிக்கு வழங்கப்படவில்லை. சபா மாநிலத்தின் அரசியலமைப்பு 10-ஆவது விதியின்படி (Article 10 of the Constitution) மாநிலச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். ஆனாலும் சில கட்டங்களில் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் முடிவுகளை வழங்க இயலும்.[4] சபா மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டம்; சபா மாநிலத்தில் முக்கியமான அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கு மாநில ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆளுநரின் அதிகாரங்கள்இருப்பினும் மாநிலத்தின் முதலமைச்சரை நியமிப்பதைத் தவிர்த்து, மற்ற உயர் அரசாங்க அதிகாரிகளை நியமிக்கும் போது முதலமைச்சருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதன் பின்னரே அரசாங்க அதிகாரிகளை நியமிக்கலாம். ஓர் அலுவலக அதிகாரியைப் பணிநீக்கம் செய்யும் போதும் இதே செயல்முறை நீடிக்கின்றது. சபா மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலச் சட்டமன்றத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் விவரமாக விவரிக்கப்பட்டு உள்ளன. மாநிலச் சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த மசோதாவிற்கு யாங் டி பெர்துவா நெகிரி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே வேளையில், ஒவ்வோர் ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் யாங் டி பெர்துவா நெகிரி உரையாற்ற வேண்டும். நிர்வாகம்மாநிலச் சட்டமன்றத்தில் யாங் டி பெர்துவா நெகிரியின் முக்கியமான செயல்பாடுகள்:
சபா ஆளுநர் பட்டியல்1965-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான சபா மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[2][5] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia