14 அக்டோபர் 1963; 61 ஆண்டுகள் முன்னர் (1963-10-14)
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் (List of lieutenant governors of Puducherry), புதுச்சேரி, இந்தியாவின்ஒன்றிய ஆட்சிப் பகுதி (ஆட்சிப் பரப்பு) ஆகும். இது புதுதில்லியின் நேரடி, குடியரசுத் தலைவரின் ஆளுமைக்குட்பட்டதாகும். புதுதில்லியை போன்று இங்கும் சிறப்பு திருத்த அரசியலமைப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பெற்ற சட்டப்பேரவை, முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை போன்ற அமைப்புகள், இப்பகுதியின் ஆளுமையில் பங்குபெறுகின்றன. குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாக புதுச்சேரி ஆட்சிப்பகுதியின் மேற்பார்வையாளர்களாக செயல்படுவர் துணைநிலை ஆளுநர் ஆவார்.
துணைநிலை ஆளுநர்
புதுவை துணை நிலை ஆளுநர் (அ) புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தென்னிந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியான, புதுச்சேரியில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநர், புதுச்சேரியின் அரசியலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். இவரது இல்லம் புதுச்சேரி, நேரு பூங்காவில் உள்ள முன்னாள் பிரஞ்சு ஆளுநர் அரண்மணையான, ராஜ் நிவாஸ் ஆகும். இந்திய அரசு நேரிடையாக, இவ்வரசிற்குத் தேவையான நிதிவளத்தை வழங்குகின்றது.
தலைமை ஆணையர் (1954-1963)
தலைமை ஆணையர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[1]