க. ஈஸ்வரசாமி
கருப்புசாமிபுதூர் கருப்புசாமிக் கவுண்டர் ஈஸ்வரசாமி என்பவர் தமிழக தொழிலதிபரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] திமுகவைச் சேர்ந்தவரான இவர் இந்தியப் பொதுத் தேர்தல் 2024-ல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். முந்தைய வாழ்க்கைஈஸ்வரசாமி தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், மைவாடி ஊராட்சி, கருப்புசாமி புதுரை பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரசாமி பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவியான லதாபிரியா மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக உள்ளார். ஈஸ்வரசாமி இருசக்கர வாகன விற்பனையகம், நூற்பாலை, சல்லிக் கல்,செயற்கை மணல் ஆகிய தொழில்களைச் செய்துவருகிறார். அரசியல் வாழ்வுதிமுகவில் செயல்பட்டுவரும் ஈஸ்வரசாமி கட்சியில் ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய பொருளாளர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்தார். தற்போது மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக பதவிவகிக்கிறார். மேலும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவராகவும் உள்ளார்.[2] இந்தியப் பொதுத் தேர்தல் 2024-ல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தல்கள்மக்களவைத் தேர்தல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia