ஜோதிமணி
ஜோதிமணி சென்னிமலை (பிறப்பு 9 ஆகத்து 1975) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இவர் மிக இளவயதிலேயே அரசியலில் நுழைந்தார். இவர் சில ஆண்டுகள் இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் தமிழ், இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவராவார். இது இவரது அரசியல் வாழ்வில் இந்தியா மற்றும் பிற நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு உதவியாக உள்ளது. ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விஇவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியின், பெரிய திருமங்கலத்தில், சென்னிமலை மற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு மகளாக 1975 ஆகத்து 9 அன்று பிறந்தார். இவரது தந்தையான சென்னிமலை ஒரு விவசாயி ஆவார். ஜோதிமணி தனது குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். இவரது தாயார் முத்துலட்சுமியால் வளர்க்கப்பட்ட இவர் உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி. வி. ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் என்எஸ்எஸ் முகாம்கள் மற்றும் சமூக சேவை பணிகளில் தீவிரமாக கலந்துகொள்பவராக இருந்தார். 2006 முதல் 2009 வரை இவர் தமிழ்நாட்டு திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக இருந்தார். பட்டப்படிப்பு
அரசியல் வாழ்க்கை22 வயதில் அரசியலில் நுழைந்த ஜோதிமணி, இந்திய இளைஞர் காங்கிரசில் தீவிரமாக பணியாற்றி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்கு அறிமுகமானவராக ஆனார்.[2] இந்திய இளைஞர் காங்கிரசின் பேராளராக 2006 ஆம் ஆண்டு அமெரிக்க ஒன்றியத்தில் நடந்த, ஆசிய இளம் தலைவர்கள் உச்சி மாநாடு மற்றும் 2009 இல் மலேசியாவில் நடைபெற்ற இளம் அரசியல் தலைவர்களுக்கான உச்சி மாநாடு போன்றவற்றில் கலந்துகொண்டுள்ளார். மேலும் 2010இல் தில்லியில் நடந்த இன்றியமையாத- ஆசிய பெண் தலைவர் குரல் என்ற தலைவர்கள் கூடலில் கலந்துகொள்ள இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ஜோதிமணி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 மற்றும் இந்தியப் பொதுத் தேர்தல், 2014 போன்றவற்றில் போட்டியிட்டுள்ளார். தேர்தல்கள்போட்டியிட்டவை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 20162016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது இவர் தனது தேர்தல் பரப்புரையை, 2016 சூலை மாதம், அரவக்குரிச்சி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கினார். இவர் களத்திலும், சமூக ஊடகங்கள் வழியாகவும் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டார். மேலும் தொகுதியின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தார். மேலும் இவர் தனது வேட்பாளரை ஆதரித்து "தவறிய அழைப்பை" அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை தொகுதியில் விநியோகிக்கப்பட்டன. இவரது முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளில் ஹேஸ்டேக், 'அரவக்குறிச்சி 2016' என்ற பதிவுகளில் தொகுதி மற்றும் வாக்காளர்களுடன் இவரது தொடர்பு குறித்த படங்கள் போன்றவை நிரம்பி உள்ளன. வாக்காளர்களை அணுக இளைஞர் குழுக்களை உருவாக்கினார்.[6] இதற்கிடையில் தி.மு.க. மற்றும் காங்கிரசு கட்சிகளிக்கு இடையில் தொகுதிபங்கீடு ஏற்பட்டது. அதில் காங்கிரசுக்கு 41 இடங்கள் என முடிவானது. ஆனால் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் காங்கிரசு போட்டியிடும் தொகுதிகள் வெளியானது. இந்த பட்டியலில் அரவக்குறிச்சி தொகுதி இடம்பெறவில்லை. ஆனால் ஜோதிமணி தான் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அச்சுறுத்தினார். ஆனாலும் கூட்டணிக் கட்சி தொகுதியை விட்டுத்தர மறுத்துவிட்டது. காரணம் இந்தத் தொகுதியானது அதற்கு முந்தைய தேர்தலில் தி.மு.க. வென்ற தொகுதிகளில் ஒன்றாகும். மேலும் இந்த முறை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுபவராக கட்சியின் முக்கிய தலைவராக இருந்த கே. சி. பழனிசாமி இருந்தது காரணம் ஆகும்.[7] தனது ஆதரவாளர்களுடன் ஆலோசணை நடத்திய பின்னர், காங்கிரசு கட்சியின் நலனுக்காக ஆரவக்குறிச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதில்லை என முடிவெடுத்தார்.[8][9] தேர்தல் 2016 மே 16 அன்று நடைபெறவிருப்பதாக அறிவித்தது.[10] பின்னர் தேர்தல் ஆணையமானது தேர்தலை 2016 மே 23 அன்றைக்கு ஒத்திவைத்தது.[11] அதன்பிறகு தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியுடன் தேர்தலை சேர்த்து நடத்துவதாகக் கூறி 2016 சூன் 13 ஆம் நாளுக்கு வாக்குப்பதிவை தள்ளிவைத்தது. இறுதியில், தேர்தல் ஆணையமானது அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தேர்தல்களை இரத்து செய்தது.[12] நாடாளுமன்றத் தேர்தல் 20192019 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 4 லட்சத்து 20,546 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான தம்பிதுரையை வென்றார்.[13][14] வகித்த பதவிகள்மாநில அளவில்[15]
இந்திய ஒன்றிய அளவில்[15]
எழுதிய நூல்கள்விருதுகள்
வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia