சனநாயகக் கட்சி (இலங்கை)
சனநாயகக் கட்சி (Democratic Party, ஜனநாயகக் கட்சி) இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இக்கட்சி 2013 மார்ச் மாதத்தில் இலங்கைத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.[2] மாகாண சபைத் தேர்தல், 2013சனநாயகக் கட்சி முதற் தடவையாக 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வடக்கு, வடமேற்கு, மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. இவற்றில் வடமேற்கு மாகாணத்தில் 46,114 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மத்திய மாகாணத்தில் 45,239 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும் கைப்பற்றியது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 170 வாக்குகளை மட்டுமே பெற்றது. எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை. மாகாணசபைத் தேர்தல், 20142014 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் இக்கட்சி போட்டியிட்டு 12 இடங்களைக் கைப்பற்றியது. தெற்கு மாகாணசபையில் 109,032 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மேற்கு மாகாணசபையில் 203,767 வாக்குகளைப் பெற்று 9 இடங்களையும் கைப்பற்றியது. ஊவா மாகாணசபைத் தேர்தலில் 6.076 வாக்குகளைப் பெற்று எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia