சரத் பொன்சேகா
ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பிறப்பு: 18 திசம்பர் 1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கின்றார். இவர் தமிழ் மக்கள் 20,000க்கும் மேற்பட்டோரை வன்னி போர்முனைப் பகுதியில் படுகொலை செய்வதற்குக் காரணமான முக்கிய சூத்திரதாரியாக பன்னாட்டு மனிதாபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டார். நவம்பர் 16, 2009 அன்று தனது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.[1][2] அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் என இலங்கை அரசினால் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்[3]. மீண்டும் பதவியில்மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றபின், சரத் பொன்சேகா மீண்டும் இலங்கை இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.[4]. 22 மார்ச் 2015இல் இலங்கை இராணுவத்தின் முதல் பீல்டு மார்சல் எனும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என கூறப்பட்டது.[5][6] மேற்கோள்கள்![]() விக்கிசெய்தியில்
தொடர்பான செய்திகள் உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia