தொ. மு. இராமராய்![]() ராமராய் (பி. 1852) தமிழ்நாடு, மதுரையை சார்ந்த செளராட்டிரர். இவர் மிகச் சிறந்த சௌராஷ்டிர மொழி அறிஞர். தமது தாய்மொழியின் வளர்ச்சிப் பணியில் தம்மை முழுமையுமாக ஈடுபடுத்தியவர். வாழ்க்கைச் சுருக்கம்ராமராயின் குடும்பப் பெயர் ஜாபாலி கோத்திரத்தைச் சேர்ந்த 'தொப்பே' என்பதாகும். தந்தையின் பெயர் முனிசவ்ளி. தாயார் பெயர் மீனாட்சி. சிறு வயதிலிருந்தே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ராமராய் 1871-ம் ஆண்டில் பண்டிதர் லட்சுமணாச்சார்யரின் மாணவராகி சகல வேத உபநிடத சாத்திரங்களிலும், பன்மொழி இலக்கண இலக்கியங்களிலும் விரிவான கல்வி கற்றார். தாய்மொழி சௌராஷ்டிர மொழி தவிர சமஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்றுப் பன்மொழி புலவரானர். 1880-ம் ஆண்டிலிருந்து தனது முழு நேரத்தையும், செல்வத்தையும் சௌராஷ்டிர மொழி எழுத்து மற்றும் அதன் லிபி வளர்ச்சிக்கே செலவிட்டார். இராமராய் அவர்கள் சௌராஷ்டிர மொழிக்கென முழுமையான அளவில் அறிவியல் முறையில் வரிவடிவம் அமைத்து அச்சு எழுத்துக்களையும் தயாரித்தார். அவற்றைக் கொண்டே நிறைய நூல்களைத் தம் செலவிலேயே வெளியிட்டார். இராமாராய் எழுதிய நூல்கள்
ஆதாரநூல்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia