800 முதல் 900 பாகை செல்சியசு வரையிலான வெப்பநிலையில் வெற்றிடத்தின் கீழ் உலோக சீரியத்துடன் சீரியம்(III) அயோடைடைச் சேர்த்து குறைத்தல் வினையின் மூலம் சீரியம் ஈரயோடைடைப் பெறலாம்.[2]
Ce + 2 CeI3 → CeI2
−78 செல்சியசு வெப்பநிலையில் திரவ அம்மோனியாவில் சீரியம் மற்றும் அம்மோனியம் அயோடைடு ஆகியவற்றின் வினையிலிருந்தும் இது உருவாகலாம். இந்த வினை சீரியம் ஈரயோடைடின் அம்மோனியா அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது. இது 200 ° செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தின் கீழ் சீரியம் ஈரயோடைடாக சிதைகிறது. [2]
Ce + 2 NH4I → CeI2 + 2 NH3 + H2
இது முதன்முதலில் இயான் டி. கார்பெட்டு [3] என்பவரால் உருவாக்கப்பட்டது.
பண்புகள்
சீரியம் ஈரயோடைடு உலோகம் போன்ற தோற்றம் மற்றும் பண்புகளைக் கொண்ட ஒரு ஒளிபுகா கருப்பு நிற திண்மமாகும். சீரியம் ஈரயோடைடில் சீரியம்(II) இல்லை. இதன் உண்மையான கட்டமைப்பு Ce 3+ (I - ) 2 e - ஆகும். இதனுடன் தொடர்புடைய அயோடைடு ஆக்சைடை உருவாக்க இச்சேர்மம் எளிதில் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. [2] லாந்தனம் டையோடைடு மற்றும் பிரசியோடைமியம் ஈரயோடைடு போன்று, சீரியம் ஈரயோடைடும் மாலிப்டினம் இருசிலிசைடு வகை கட்டமைப்பில் உருவாகிறது [4]I 4/ mmm (எண். 139) என்ற இடக்குழு கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது. [5]
மேற்கோள்கள்
↑ 1.01.1Haynes, William (2012). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data. Boca Raton, Fla. London: CRC Taylor & Francis distributor. p. 4-56. ISBN978-1-4398-8049-4. கணினி நூலகம்793213751.
↑Jungmann, Angelika; Claessen, R.; Zimmermann, R.; Meng, Ge; Steiner, P.; Hüfner, S.; Tratzky, S.; Stöwe, K. et al. (1995). "Photoemission of LaI2 and CeI2". Zeitschrift für Physik B Condensed Matter (Springer Science and Business Media LLC) 97 (1): 25–34. doi:10.1007/bf01317584. பன்னாட்டுத் தர தொடர் எண்:0722-3277. Bibcode: 1995ZPhyB..97...25J.