ஜனதா மோர்ச்சாஜனதா மோர்ச்சா (Janata Morcha) (மக்கள் முன்னணி) 1974-இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும், அவர் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியையும் எதிர் கொள்வதற்காக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் உருவான பல அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். 1976-இல் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக்கு எதிராக போராடிய ஜனதா மோர்ச்சா, கட்சிக்கு ஜனதா கட்சி என்று பெயரிட்டது. 1977 இந்தியப் பொதுத் தேர்தலில் பெருவாரியான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் காங்கிரசு கட்சியை எதிர்த்து ஜனதா கட்சி போட்டியிட்டு, இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியை வென்று, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் ஆளும் கட்சியாக விளங்கியது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக காங்கிரசு கட்சி அல்லாத அரசியல் கட்சியான ஜனதா கட்சி ஆளும் கட்சியாக மாறியது. [1] ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாறு1971-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், நிறுவன காங்கிரசு, சம்யுக்த சோசலிச கட்சி, சுதந்திரா கட்சி மற்றும் பாரதிய ஜனசங்கம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி அக்கூட்டணிக்குக் கிடைக்கவில்லை. இந்திரா காங்கிரசு கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. [2]இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நடைபெற்ற 1971 இந்திய - பாகிஸ்தான் போரில், இந்தியா பெற்ற வெற்றியே, இந்திரா காங்கிரஸ் கட்சி, தேர்தலில் போரின் வெற்றியை அறுவடை செய்ய காரமாணயிற்று. அமைப்பு மற்றும் தேர்தலில் வெற்றிதேசிய அளவில் இந்திரா காந்தியையும், அவர்தம் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர்களின் கடும் முயற்சியால் உருவாகிய ஜனதா மோர்ச்சா கட்சியில் நிறுவன காங்கிரசு, பாரதிய ஜனசங்கம், சம்யுக்த சோசலிச கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா மோர்ச்சா கட்சி உருவானாது. சூன் 1975-இல் நடைபெற்ற குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜனதா மோர்ச்சா கட்சி, இந்திரா காங்கிரஸ் கட்சியை வென்று குஜராத் சட்டமன்றத்தின் ஆளும் கட்சியாக மாறியது.[2][3] ராஜ் நாராயணன் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில், 1971-இல் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடுத்த வழக்கில், இந்திரா காந்திக்கு எதிராக வெளியான தீர்ப்பில், இந்திரா காந்தி தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது கூறப்பட்டிருந்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அடுத்த நாளே, இந்திரா காந்தியின் கட்டாயத்தால், இந்தியக் குடியரசுத் தலைவர் 26 சூன் 1925-இல் நெருக்கடி நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டது. நெருக்கடி நிலை சட்டத்தை அவதூறாகப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் சட்டமன்றங்கள் இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டது. இதனால் குஜராத்தில் ஜனதா மோர்ச்சா கட்சி ஆளும் குஜராத் சட்டமன்றமும் கலைக்கப்பட்டது. ஜனதா கட்சிநெருக்கடி காலத்தில் ஜனதா மோர்ச்சா கட்சியின் தேசியத் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள், கட்சியின் நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். 18 சனவரி, 1977இல் ஜனதா கட்சி முறையாக தோற்றுவிக்கப்பட்டது. குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜனதா மோர்ச்சா வெற்றி பெற்றதைப் போலவே 1977 இந்தியப் பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்று, இந்திய வரலாற்றில் முதன் முறையாக காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவரான மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia