ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். சிபு சோரன் இதன் தலைவராக இருந்து வருகிறார். இதன் தேர்தல் சின்னம் வில்-அம்பு. பதினேழாவது மக்களவையில் இக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளனர். 2014 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்2014ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் வென்றது. 2019 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனாதா தளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களிலும், .காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 1 இடங்களிலும் வெற்றி பெற்றன. 29 திசம்பர் 2019, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்
|
Portal di Ensiklopedia Dunia