மனிதநேய மக்கள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[1] மக்கள் உரிமை எனும் அதிகாரப்பூர்வ இதழை இக்கட்சி வெளியிடுகிறது. தற்போது இதன் தலைவராக பேரா. எம். எச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளராக ப. அப்துல் சமது, பொருளாளராக கோவை உமர் ஆகியோர் உள்ளனர்.[2] மக்களவைத் தேர்தல் 2009கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில், 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மமக 4 தொகுதியில் கூட்டணியின்றி தனித்து நின்று கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. வேட்பாளர்கள் விபரம்:-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 20112011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா. எம். எச். ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்2011 ஆம் ஆண்டு முதல் 2021 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 20212021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[9][10] மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia