ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன் (பிறப்பு: 10 ஆகஸ்டு 1975), இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் 5வது முதலமைச்சராக தற்போது உள்ளார்.[1][2] இவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.[3] முன்னர் இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 2013 முதல் 2014 முடிய பதவி வகித்தவர்.[4] இவரது தந்தை சிபு சோரன் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மூன்று முறை (2 மார்ச் 2005 - 12 மார்ச் 2005; -27 ஆகஸ்ட் 2008 - 18 ஜனவரி 2009 & 30 டிசம்பர் 2009 - 31 மே 2010) பதவி வகித்தவர். இவரது மனைவி பெயர் கல்பனா சோரன் ஆகும். ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முன்னர் 2010 முதல் 2013 முதலமைச்சராகவும்; சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். மேலும் 2015 முதல் 2019 வரை மற்றும் 2009 முதல் 2010 வரை ஜார்க்கண்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் . நிலம் மற்றும் பண மோசடி வழக்குநிலம் மற்றும் பண மோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் ஏழு முறை அழைப்பாணை விடுத்துள்ளது.[5][6] சட்டமன்ற உறுப்ப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கப் பரிந்துரைதேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அரசு நிலக்கரி சுரங்கங்களை தனது பெயருக்கு குத்தகைக்கு ஒதுக்கிய காரணத்தினால், இந்தியத் தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய 26 ஆகஸ்டு 2022 அன்று ஜார்கண்ட் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.[7] மீண்டும் பதவியில்உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 2 பிப்ரவரி 2024 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய சோரன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 4 சூலை 2024 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.[8] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia