டிசிப்ரோசியம்(III) அயோடைடு
டிசிப்ரோசியம்(III) அயோடைடு (Dysprosium(III) iodide) DyI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். டிசிப்ரோசியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இந்த இரும சேர்மம் உருவாகிறது.[1] தயாரிப்புடிசிப்ரோசியத்துடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம்(III) அயோடைடு உருவாகிறது. 2Dy + 3I → 2DyI3 பாதரச(II) அயோடைடுடன் டிசிப்ரோசியம் துகள்களைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் டிசிப்ரோசியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது. 2Dy + 3HgI2 → 2DyI3 + 3Hg இயற்பியல் பண்புகள்டிசிப்ரோசியம்(III) அயோடைடு நீரில் கரையக்கூடிய ஒரு நீருறிஞ்சும் சேர்மமாகும்.[2][3] மஞ்சள்-பச்சை செதில் திண்மமாக இது காணப்படுகிறது.[4] R3 என்ற இடக்குழுவும் பிசுமத்(III) அயோடைடு வகையிலான முக்கோண வடிவ படிக அமைப்பையும் கொண்டுள்ளது. பயன்வெண்மை நிற ஒளியை உருவாக்கும் வாயு விளக்குகளில் டிசிப்ரோசியம்(III) அயோடைடு பயன்படுகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia