டிசிப்ரோசியம்(III) சல்பைடு
டிசிப்ரோசியம்(III) சல்பைடு (Dysprosium(III) sulfide) என்பது Dy2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். டிசிப்ரோசியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகும்.[1][2][3][4] தயாரிப்புமந்தவாயுச் சூழல் அல்லது வெற்றிடத்தில் தூய்மையான டிசிப்ரோசியம் மற்றும் கந்தகத்தை சேர்த்து சூடுபடுத்தினால் டிசிப்ரோசியம்(III) சல்பைடு உருவாகும்:
ஐதரசன் சல்பைடு மற்றும் டிசிப்ரோசியம் ஆக்சைடு ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் டிசிப்ரோசியம்(III) சல்பைடு உருவாகும்:
இயற்பியல் பண்புகள்டிசிப்ரோசியம்(III) சல்பைடு மஞ்சள்-ஆரஞ்சு-பழுப்பு நிற படிகங்களை உருவாக்குகிறது: கனசதுர மற்றும் ஒற்றைச்சரிவச்சு அமைப்புகள் உருவாகின்றன.[5] பழுப்பு-சிவப்பு, கருப்பு அல்லது பச்சை நிறத்தில் படிகங்களை உருவாக்குகிறது என்பதற்கான சான்றுகளும் உள்ளன. வறண்ட காற்றில் படிகங்கள் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. ஆனால் ஈரப்பதமான காற்றில் அவை மெதுவாக நீராற்பகுப்பு செய்யப்படுகின்றன. இந்த சேர்மம் நீர் மற்றும் அமிலங்களில் மிதமாக கரைகிறது. வேதிப் பண்புகள்டிசிப்ரோசியம்(III) சல்பைடு காற்றில் நன்றாகச் சூடுபடுத்தினால் ஆக்சிசனேற்றம் அடைகிறது:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia