உயர் வெப்பநிலைகளில் பாசுபரசும் டிசிப்ரோசியமும் சேர்ந்து வினைபுரிந்து டிசிப்ரோசியம் பாசுபைடு உருவாகிறது.
Dy + P → DyP
இயற்பியல் பண்புகள்
டிசிப்ரோசியம் பாசுபைடு NaCl படிகக் கட்டமைப்பில் உள்ளது. (a=5.653 Å)[4] என்ற அளபுருக்களுடன் டிசிப்ரோசியம் பாசுபைடு சோடியம் குளோரைடின் கட்டமைப்பில் படிகமாகிறது. இங்கு டிசிப்ரோசியம் +3 என்ற இணைதிறன் கொண்டுள்ளது. இதன் கற்றை இடைவெளி அளவு 1.15 எலக்ட்ரான் வோல்ட்டாகவும் எலக்ட்ரான் இயங்குதிறன் (μH) 8.5 செ.மீ3/V·s. அளவாகவும் உள்ளது.[5]
கனசதுரப் படிகத் திட்டத்தில் இடக்குழு Fm3m என்ற அளபுருவில் டிசிப்ரோசியம் பாசுபைடு படிமாகிறது.[6]
பயன்கள்
அதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் ஒரு குறைக்கடத்தியாக டிசிப்ரோசியம் பாசுபைடு பயன்படுத்தப்படுகிறது.[1][7]