டிசிப்ரோசியம்(II) குளோரைடு
டிசிப்ரோசியம்(II) குளோரைடு தோற்றத்தில் பளபளப்பான கருப்பு நிறத்தில் இருக்கும். உப்பு காற்றில் வெளிப்பட்டால் ஆக்சிசனேற்றத்தால் சேதமடைகிறது. இது ஒரு மின் தடையை கொடுக்கும் சேர்மமாகும்.[2] இசுட்ரோன்சியம் புரோமைடு, இட்டெர்பியம் டைகுளோரைடு மற்றும் டெர்பியம் டைகுளோரைடு ஆகிய சேர்மங்களின் கட்டமைப்பை போன்ற அமைப்பையே இதுவும் கொண்டுள்ளது. டிசிப்ரோசியம்(II) குளோரைடு இரண்டு வடிவங்களில் காணப்படுகிறது. குறைந்த வெப்பநிலை வடிவம் 652 °செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவாக உள்ளது. a=6.69, b=6.76, மற்றும் c=7.06 Å என்ற அளவுகளில் அலகு செல் பரிமாணங்கள் உள்ளன.[3] தயாரிப்புஉருகிய டிசிப்ரோசியம் முக்குளோரைடை டிசிப்ரோசியம் உலோகத்துடன் சேர்த்து சூடாக்கி, விரைவாகத் தணிப்பதன் மூலம் டிசிப்ரோசியம்(II) குளோரைடு சேர்மத்தை தயாரிக்கலாம். மாலிப்டினம், நையோபியம் அல்லது தாண்டலம் புடக்குப்பிகள் பயன்படுத்தப்பட்டால் டிசிப்ரோசியம் உலோகக் கலவை உருவாவதைத் தவிர்க்க இயலும்.[4] வினைகள்டிசிப்ரோசியம்(II) குளோரைடு சேர்மம் பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு இளக்கிகளுடன் சேர்க்கப்பட்டால் தைட்டானியம் டைகுளோரைடை தைட்டானியம் உலோகமாக குறைக்கும் திறன் கொண்டது.[5]
தொடர்புடைய பிற சேர்மங்கள்இலித்தியத்துடன் சேர்ந்த ஒரு முப்படி டிசிப்ரோசியம்(II) குளோரைடு சேர்மமும் அறியப்படுகிறது:(LiDy2Cl5) இலித்தியம் உலோகத்தையும் டிசிப்ரோசியம்(III) குளோரைடு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து 700 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதன் மூலம் இந்த முப்படி சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இதுவும் கருப்பு நிறத்தில் காணப்படும். LiDy2Cl5 சேர்மத்தின் கட்டமைப்பு ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் C2/c 4 என்ற இடக்குழுவில் a = 16.45.6 ; b = 6.692; மற்றும் c = 7.267; என்ற அணிக்கோவை அளவுருக்களும் β = 95.79° என்ற கோண அளவும் கொண்ட படிக வடிவமாக உள்ளது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia