தங்கச்சிமடம்

தங்கச்சிமடம்
—  இரண்டாம் நிலை ஊராட்சி  —
தங்கச்சிமடம்
அமைவிடம்: தங்கச்சிமடம், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 9°17′05″N 79°15′04″E / 9.284728°N 79.25108°E / 9.284728; 79.25108
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
ஊராட்சி தலைவர் ---
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் http://www.thangachimadam.com/

தங்கச்சிமடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தைத் சேர்ந்த ஒரு இரண்டாம் நிலை ஊராட்சியும் ஆகும்[1]. இந்த ஊராட்சியில் வடக்கு, தெற்கு என இரண்டு பக்கமும் கடலோர மீனவக் கிராமங்கள் உள்ளன.

போக்குவரத்து வசதிகள்

தங்கச்சிமடம் சாலைப் போக்குவரத்து வசதிகள் நன்கு பெற்ற ஊராகும். மேலும் தங்கச்சிமடம் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது. முன்னர் இங்கே அமைந்திருந்த இரயில் நிலையம்[சான்று தேவை] பின்னர் அகற்றப்பட்டது. தற்போதுள்ள பாம்பன் நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். எனினும், இந்தியாவின் பகுதிகளை இணைக்கும் முக்கிய இரயில்கள் பாம்பனில் நிற்பதில்லை, அவை இராமேசுவரத்தில் மட்டுமே நின்று புறப்படுகின்றன.

ஆன்மிக இடங்கள்

  • பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
  • உச்சயினி மாகாளியம்மன் திருகோவில்
  • முத்துமாரியம்மன் திருக்கோவில்
  • ஏகாந்தரமார் கோவில்[2]
  • பள்ளிவாசல், தங்கச்சிமடம்
  • புனித சந்தியாகப்பர் ஆலயம்

திருவிழாக்கள்

இங்கு ஆண்டுதோறும் பலவிதமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது, முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவமாகும். இவ்விழாவானது ஆடி மாதந்தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

அருகிலுள்ள இடங்கள்

இவ்வூரின் அருகில் உள்ள "பேக்கரும்பு" எனும் ஊரில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் சமாதி அமைந்துள்ளது.

பொருளாதாரம்

இவ்வூர் மக்கள் பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். மீன்பிடித்தொழில் இங்கு முக்கியமான ஒன்றாகும். இப்பகுதியில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் கயிறு திரித்தல் தொழிலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.[3]. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இங்கு மல்லிகைச் செடிகள் பதியமிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்தலும் முக்கியமான தொழிலாக உள்ளது. வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2015-08-07.
  2. ராமேஸ்வரம் கோவிலில் ஜோதிலிங்கம் கண்டெடுப்பு, tamil.oneindia.com பெப்ரவரி 10, 2002
  3. "கடலலைகள் தாலாட்டும் தங்கச்சிமடம்". தினகரன். 11 பிப்ரவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305023653/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=425131&cat=504. பார்த்த நாள்: 6 ஆகத்து 2015. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya