தமிழ்நாட்டின் உயிரினங்கள்
![]() தமிழ்நாட்டில் 2000க்கும் அதிகமான உயிரினங்கள் காணப்படுகின்றன.[1] பாலூட்டிகள்![]() ஆசிய யானை, வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, தேன் கரடி, கடமா, காட்டுப்பன்றி, சோலைமந்தி, நீலகிரி மந்தி, சாம்பல் மந்தி, குல்லாய் குரங்கு, நீலகிரி வரையாடு, நாற்கொம்பு மான், செந்நாய், மர மூஞ்சூறு, கடமான், சருகுமான், குரைக்கும் மான், காட்டுப்பூனை, மீன்பிடிப் பூனை, சிறுத்தைப் பூனை, சிறிய இந்திய புனுகுப் பூனை, ஆசிய மரநாய், சிறிய இந்திய கீரிப் பிள்ளை, புல்வாய், புள்ளிமான், கோடிட்ட கழுதைப்புலி, நீலகிரி மார்ட்டின், திருவாங்கூர் பறக்கும் அணில், பழுப்பு மலை அணில், பறக்கும் அணில், இந்திய அணில், இந்திய முயல், இந்திய எறும்பு தின்னி, காட்டு நீர்நாய், மலபார் ஊசிமுனை டோர்மவுஸ், இந்தியக் குள்ள நரி, சென்னை முள்ளெலி, இந்திய கொண்டை முள்ளம்பன்றி மற்றும் ஆற்று நீர்நாய் ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் பாலூட்டிகள் ஆகும்.[2] பறவைகள்![]() மலபார் கொரிப்பான், மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, கருப்பு புறா, நீலகிரி சிரிக்கும் பறவை, பொரி வல்லூறு, இராசாளிப் பருந்து, கிழக்கத்திய டாலர் பறவை, நீலகிரி நெட்டைக்காலி, சிறிய சிலந்திவேட்டைப் பறவை, நீலகிரி நீலச்சிட்டு, பட்டாணி உப்புக்கொத்தி, சிறிய இந்திய உழவாரன், வெள்ளை உதர வால் காக்கை, வெள்ளை உதர மரங்கொத்தி, பச்சை ஏகாதிபத்தியப் புறா, நீலகிரி ஈபிடிப்பான், பெரிய காது பக்கி, வெள்ளைக் கானாங்கோழி, இதயவடிவப் புள்ளி மரங்கொத்தி, மயில், சாம்பல் மார்புப் பச்சைப் புறா, பொரி உள்ளான், இளவேனிற்கால தொங்கும் கிளி, மலபார் கிளி, வெண்புருவக் கொண்டலாத்தி, மலை மீன்கொத்தி, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, அரக்குத் தலை சிறிய மரங்கொத்தி, கருப்பு ஆரஞ்சு ஈபிடிப்பான், பச்சைக் குக்குறுவான், நீலத்தாடி தேனீ-உண்ணும் பறவை, அகலவால் புல்பறவை, நீர்க்காக்கை, பாம்புத் தாரா, ஹெரான், இக்ரெட், நத்தை குத்தி நாரை, துடுப்பு வாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், முக்குளிப்பான், இந்திய காணான்கோழி, நெடுங்கால் உள்ளான், சில புலம்பெயரும் வாத்துக்கள் மற்றும் சாம்பல் பெலிகன் ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் ஆகும். கடல்வாழ் உயிரினங்கள்![]() ஆவுளியா, ஆமை, ஓங்கில், கருவாலிக்கொட்டை புழு ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள் ஆகும். பூச்சிகள்வண்ணத்துப்பூச்சிகள்: தெற்கத்திய பறவையிறக்கை, உரோசா அழகி, சிவப்புடல் அழகி, நெட்டிலி அழகி, நாட்டு நீல அழகி, மரகத அழகி, கத்திவால் அழகி, ஐம்பட்டை கத்திவால் அழகி, கோமாளி, மலபார் பட்டை அழகி, மலபார் காகம், சிவப்பு ஹெலன், கறிவேப்பிலை அழகி, நீல மோர்மோன், பாரிசு மயில், மலபார் பட்டை மயில், பட்டை மயில், கொன்னை வெள்ளையன், கடோப்சிலியா பைராந்தே, சிறிய புள் மஞ்சள், புல் மஞ்சள், மஞ்சள் அழகி, சுற்றும் வெள்ளையன், செபோரா நெரிசா, செபோரா நடினா, கேப்பர் வெள்ளை, அபியாஸ் இந்திரா, அபியாஸ் லின்சிடா, அபியாஸ் அல்பினா, அபியாஸ் வர்டீ, சிறிய ஆரஞ்சு முனை, வெள்ளை ஆரஞ்சு முனை, மஞ்சள் ஆரஞ்சு முனை, பரேரோனியா வலேரியா, பெரிய ஆரஞ்சு முனை ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் பூச்சிகள் ஆகும். ஊர்வன![]() முக்கர் முதலை, கருநாகம், புல்விரியன், இந்திய மலைப் பாம்பு, திருவிதாங்கூர் ஆமை, இந்திய நாகம், கட்டுவிரியன், கண் குத்திப் பாம்பு, குக்ரி பாம்பு, இந்திய உடும்பு, இந்திய பச்சோந்தி, ஓணான், பறக்கும் பல்லியோந்திகள், சிற்றாமை (ஆலிவ் ரிட்லி), கொச்சி பிரம்பு ஆமை, கருப்பு ஆமை, கண்ணாடி விரியன், பல்வேறு வகையான ஸ்கிங் ஓணான்கள் மற்றும் பல்லிகள் ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் ஊர்வன ஆகும். நீர்நில வாழ்வனமலபார் இரவுத் தவளை, கேரளா மலைத் தவளை, வெருகோஸ் தவளை, பெட்டோமின் இரவுத் தவளை மற்றும் பரம்பிக்குளம் தவளை ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் நீர்நில வாழ்வன ஆகும்.[3] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia