தாலியம்(III) அசிட்டேட்டு
தாலியம்(III) அசிட்டேட்டு (Thallium(III) acetate) என்பது Tl(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். தாலியத்தின் அசிட்டேட்டு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. நுண்ணுயிரியலில் ஒரு தெரிவு செய்யப்பட்ட வளர்ச்சி ஊடகமாக இது நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகும்.[1][2] ஆனால் இது முடி உதிர்தல் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. 8 மி.கி/கி.கி அளவு உட்கொள்ளப்பட்டால் இது கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். மேலும் பெரியவர்களுக்கு இச்சேர்மம் ஏற்படுத்தும் குறைந்தபட்ச மரண அளவு 12 மி.கி/கி.கி ஆகும்.[3] தயாரிப்பு80% அசிட்டிக் அமிலத்தை தாலியம்(III) ஆக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தாலியம்(III) அசிடேட்டைத் தயாரிக்கலாம். மேலும் விளைபொருள் அசிட்டிக் நீரிலியாகப் படிகமாகிறது.[4] பண்புகள்நீரற்ற தாலியம்(III) அசிடேட்டு C2/c என்ற இடக்குழுவுடன் a = 15.54 Å b = 8.630 Å and c = 7.848 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் Å உடன் β = 113.92° என்ற பிணைப்புக் கோணத்துடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது. ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்பாட்டு அலகுகளும் 2.57 என்ற அடர்த்தியையும் இச்சேர்மம் கொண்டுள்ளது. ஒவ்வொரு தாலியம் அயனிக்கும் மூன்று அசிடேட்டு அயனிகள் இடுக்கிணைப்பாக பிணைந்துள்ளன.[5] தாலியம்(III) அசிடேட்டு ஒற்றைநீரேற்றும் C2/c என்ற இடக்குழுவுடன் a = 9.311 Å, b = 14.341 Å, c = 9.198 Å, β = 119.69 ° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது. மேலும் அலகு செல் தொகுதி V = 1067.0 Å3 Z = 4, 2.49. என்ற அடர்த்தியையும் கொண்டுள்ளது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia