தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு![]() தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு (Thallium barium calcium copper oxide) என்பது TlmBa2Can−1CunO2n+m+2 என்ற பொது வாய்ப்பாடு கொண்ட ஒரு உயர் வெப்பநிலை மீகடத்தியாகும். TBCCO என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதப்படும் இது திப்கோ என்று பேச்சு வழக்கில் உச்சரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அர்கன்சாசு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை ஆலென் எம் எர்மான் ஆய்வகத்தில், 1987 ஆம் ஆண்டு சென்கிசை செங்கி[1] தன்னுடைய முனைவர் பட்டத்திற்குப் பின்னரான ஆய்வில் Tl2Ba2Ca2Cu3O10 (TBCCO-2223) என்ற இச்சேர்மத்தைக் கண்டறிந்தார். காந்தப்பாய்ம வெளியேற்றம் மற்றும் பாய்மம் தடுக்கும் குறிப்புகள் ஆகியனவற்றை மீக்கடத்துத் துளிமக் குறுக்கீடுக் கருவி (SQUID)காந்தமானியை உபயோகித்து, இந்தப் பேரளவு மீக்கடத்துத்திறன் உறுதி செய்யப்பட்டது. (சுழிப்புலக் குளிர்வு மற்றும் புலக் குளிர்வு நிலைகளில்) தெற்கு கரோலினாவில் உள்ள திமிர் தத்தா மீக்கடத்தி ஆய்வகத்தில் இந்த அவதானிப்பு நிகழ்ந்தது[2]. 1988 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பால் சூ ஏற்பாடு செய்த அவுசுடன் ,டெக்சாசில் நடைபெற்ற உலக மீக்கடத்துத்திறன் மாநாட்டில் ஆலென் எர்மான் தன்னுடைய கண்டுபிடிப்பு மற்றும் மாறுநிலை வெப்பநிலையான 127 K முதலியனவற்றை முறையாக வெளியிட்டார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia