தாலியம்(III) நைட்ரேட்டு
தாலியம்(III) நைட்ரேட்டு (Thallium(III) nitrate) என்பது தாலியம், நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் ஆகியவை இணைந்து உருவாகும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு Tl(NO3)3.ஆகும்[1] . இது தாலிக் நைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இச்சேர்மம உயர்நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு திண்மம் ஆகும். பொதுவாக இது மூவைதரேட்டாகவே காணப்படும். இதனுடைய பகுதிப்பொருட்களான தாலியம் அயனி மற்றும் நைட்ரேட்டு அயனி இரண்டும் வலுவான ஆக்சிசனேற்றிகளாகும். தோலின் மீது பட்டால் மிகவும் அதிகமான பாதிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. தாலிக் நைட்ரேட்டு சிதைவடையும்போது நைட்ரசனின் ஆக்சைடுகளைத் தருகிறது. தண்ணீருடன் சேரும் பொழுது இச்சேர்மம் சிதைவடைகிறது. வலிமையான ஒடுக்கிகளுடன் இது முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. மெத்தாக்சில் பீனாலை குயினோன் அசிட்டால்களாகவும், ஆல்க்கீன்களை அசிட்டால்களாகவும், வளைய ஆல்கீன்களை வளையம் சுருங்கிய ஆல்டிகைடுகளாகவும் மாற்றுகிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia