மிஸ் ஏசியா பசிபிக் இண்டர்நேசனல் 2000 பெமினா மிஸ் இந்தியா ஆசியா பசிபிக் 2000
வாழ்க்கைத் துணை
சாகில் சங்கா (தி. 2014; divorce 2019)
வைபவ் ரேகி (தி. பிழை: செல்லாத நேரம்)
பிள்ளைகள்
2
தியா மிர்சா ரெக்கி (பிறப்பு தியா ஆண்ட்ரிச் ; 9 திசம்பர் 1981 [1] ) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் முதன்மையாக இந்தித் திரைப்படங்களில் பணிபுரிகிறார். 2000 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாஆசியா பசிபிக் பட்டம் வென்ற பிறகு, 2000 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் இன்டர்நேசனல் அழகி பட்டத்தை வென்றார். ரெஹ்னா ஹை டெர்ரே தில் மெய்ன் (2001) என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து இவர் தஸ் (2005), லகே ரஹோ முன்னா பாய் (2006), ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் (2007), சஞ்சு (2018) உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தன் முன்னாள் கணவர் சாகில் சங்காவுடன் இணைந்து பார்ன் ஃபிரீ என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். [2][3] விவாகரத்துக்குப் பிறகு, இவர் 2019 ஆம் ஆண்டில் தானே சொந்தமாக ஒன் இந்தியா ஸ்டோரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு இவர் காபிர் (2019), ஐசி 814: தி காந்தஹார் ஹைஜாக் (2024) ஆகிய வலை தொடர்களில் நடித்தார்.
துவக்க கால வாழ்க்கை
மிர்சா இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை, ஃபிராங்க் ஹேண்ட்ரிச், மியூனிக்கைத் தளமாகக் கொண்ட ஒரு ஜெர்மன் வரைகலை மற்றும் தொழில்துறை கண்காட்சி வடிவமைப்பாளரும், கட்டடக் கலைஞரும், ஓவியரும், உட்பகுதி வடிவமைப்பாளரும் ஆவார். இவரது தாயார் தீபா, ஒரு பெங்காலி உட்பகுதி வடிவமைப்பாளரும், நிலத்தோற்ற வடிவமைப்பாளரும் ஆவார். மேலும் அவர் குடிநோயாளிகள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு உதவவும் தன்னார்வத் தொண்டராக உள்ளார். இவருக்கு நான்கரை வயது இருந்தபோது, இவருடைய பெற்றோர் மணமுறிவு செய்து கொண்டனர். [4][5] இவரது தாயார் ஐதராபாத்தைச் சேர்ந்த அகமது மிர்சா என்ற முசுலிம் நபரை மணந்த பிறகு, இவர் தனது மாற்றாந்தந்தையின் குடும்பப் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டார். அவர் 2003 இல் இறந்தார். [4]
துவக்கத்தில் இருபாலர் பள்ளியான வித்யாரண்யா உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, மிர்சா கைதராபாத்தில் உள்ள மகளிர் பள்ளியான நாசர் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் இவர் ஸ்டான்லி ஜூனியர் கல்லூரியில் பயின்று, ஐதராபாத் அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [6]
தொழில்
வடிவழகியாக
மிர்சா கல்லூரியில் படிக்கும் போது நீரஜின் மல்டி மீடியா ஸ்டுடியோ என்ற ஊடக நிறுவனத்தில் வணிக நிர்வாகியாகப் பணியாற்றினார். [7] அதே நேரத்தில், இவர் லிப்டன், வால்ஸ் ஐஸ்கிரீம், எமாமி மற்றும் பல வணிக்க் குறியீடுகளின் அச்சு விளம்பரங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் வடிவழகியாகத் தோன்றினார். 2000 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், பின்னர் 2000 ஆம் ஆண்டு மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றார். [8][9] 2013 ஆம் ஆண்டில், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட "50 அழகான முகங்கள்" என்ற பட்டியலில் மிர்சாவுக்கு 15 வது இடத்தைக் கொடுத்தது. [10]
நடிகையாக
இவர் கௌதம் மேனன் இயக்கிய ரெஹ்னா ஹை டெர்ரே தில் மேன் என்ற படத்தில் அறிமுகமானார், இது மேனனின் தமிழ் திரைப்படமான மின்னலேயின் மறு ஆக்கம் ஆகும். [11] பின்னர் இவர் அலக், தம், தீவானப்பன், தும்கோ ந பூல் பாயேங்கே, தும்சா நஹின் தேகா: எ லவ் ஸ்டோரி, பரினீதா, தஸ், லகே ரஹோ முன்னா பாய்,சலாம் மும்பை போன்ற படங்களில் தோன்றினார். 2018 ஆம் ஆண்டு, சஞ்சு என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சஞ்சய் தத்தின் மனைவி மன்யதா தத் வேடத்தில் நடித்தார். அது அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக ஆனது. 2020 ஆம் ஆண்டில், இவர் தப்பாத் படத்தில் தோன்றினார், அது சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றது.
இவர் 2019 இல் ஜீ5 வலைத் தொடரான காஃபிரில் தோன்றினார். காஷ்மீரை பின்னணியாகக் கொண்ட இந்தத் தொடரில், மோகித் ரைனாவுக்கு ஜோடியாக நடித்தார். [12]
தயாரிப்பாளராக
2011 ஆம் ஆண்டில், இவர் தன் முன்னாள் கணவர் சாகில் சங்காவுடன் இணைந்து பார்ன் ஃப்ரீ என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் லவ் பிரேக்கப்ஸ் ஜிந்தகி, பாபி ஜசூஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பான மைண்ட் தி மல்ஹோத்ராஸ் என்ற வலைத் தொடரையும் தயாரித்தார். இந்தத் தொடரில் சைரஸ் சாஹுகர் மற்றும் மினி மாத்தூர் ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்தனர். [13] 2019 திசம்பரில், "ஒன் இந்தியா ஸ்டோரிஸ்" என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்குவதாக அறிவித்தார். [14]
மிர்சா ஃபெமினா மிஸ் இந்தியா 2000 போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பின்னர் மிஸ் ஆசியா பசிபிக் 2000 போட்டிக்குச் சென்று அங்கு வென்றார். மிஸ் இந்தியாவில் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல், மிஸ் ஏவான், மிஸ் க்ளோஸ்-அப் ஸ்மைல் ஆகிய பட்டங்களையும் வென்றார். 3, திசம்பர், 2000 அன்று பிலிப்பைன்சின் மணிலாவில் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றபோது, தாரா ஆன் ஃபோன்சேகாவுக்குப் அடுத்து 27 ஆண்டுகளில் இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவதில் இவர் ஹாட்ரிக் சாதனை படைத்தார்; லாரா தத்தா பிரபஞ்ச அழகி பட்டத்தையும், பிரியங்கா சோப்ராஉலக அழகி பட்டத்தையும் அதே ஆண்டில் வென்றனர். [15]
தனிப்பட்ட வாழ்க்கை
2014 ஏப்ரலில், மிர்சா தனது நீண்டகால வணிக கூட்டாளியான சாஹில் சங்காவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அவர்கள் 18, அக்டோபர், 2014 அன்று தெற்கு தில்லியின் சத்தர்பூரில் உள்ள இவரது பண்ணை வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். [16] ஆகஸ்ட் 2019 இல், மிர்சா தங்கள் பிரிவை அறிவித்தார். [17][18]
15 பிப்ரவரி 2021 அன்று, மிர்சா மும்பைபாந்த்ராவில் தொழிலதிபர் வைபவ் ரெக்கியை மணந்தார்.
தனக்கு மே 14 அன்று அவ்யான் ஆசாத் ரேகி என்ற ஆண் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததாகவும், குழந்தை 2 மாதங்கள் என்ஊசியுவில் இருந்ததாகவும் 14, யூலை , 2021 அன்று, மிர்சா அறிவித்தார். வைபவ் ரேக்கியின் முந்தைய திருமணத்திலிருந்து இவருக்கு சமைரா ரேகி என்ற வளர்ப்பு மகளும் உள்ளார்.