பாந்த்ரா
பாந்த்ரா (Bandra) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பெருநகரமும்பை மாநகராட்சியில் அமைந்த பகுதிகளில் ஒன்றாகும். இது மும்பை பெருநகர மாநகராட்சியில், மண்டலம் எண் 3-இல், வார்டு எண் எச் மேற்கில் அமைந்துள்ளது. மும்பை மாவட்டத்தையும் - பாந்தரா நகரத்தையும் பிரிக்கும், மித்தி ஆற்றின் கரையில், மும்பை புறநகர் மாவட்டத்தில் பாந்த்ரா நகரம் அமைந்துள்ளது. [2] பாந்திரா நகரம், கிழக்கு பாந்திரா மற்றும் மேற்கு பாந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிராவில் மும்பை, புனே நகரகளுக்கு அடுத்து இந்நகரம் மூன்றாவது பெரிய வணிக மையமாக உள்ளது. அருகமைந்த பகுதிகள்பாந்திரா நகரம் மித்தி ஆற்றாங்கரையில் உள்ளது. பாந்தரா நகரத்திற்கு அருகே தாராவி, கர், குர்லா, மாகிம், சாந்தகுரூஸ் பகுதிகள் உள்ளது. போக்குவரத்து![]() பாந்திரா கிழக்கில் இரயில்வே நிலையம் உள்ளது. பாந்திரா-வொர்லி கடற்பாலம் பாந்திராவையும், மத்திய மும்பையையும் இணைக்கிறது. மேற்கோள்கள்
}} |
Portal di Ensiklopedia Dunia