திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில்
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில் (திருக்காறாயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 119ஆவது சிவத்தலமாகும். அமைவிடம்சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் கபால முனிவருக்குக் காட்சி தந்தார் என்பதும் பதஞ்சலிக்கு எழுவகைத் தாண்டவங்களையும் காட்டினார் என்பதும் தொன்நம்பிக்கைகள். மேலும் இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் தைலத்தை பயன்படுத்தி வர கண் சம்மந்தமான நோய்கள் நீங்கும். இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. பக்தி இலக்கியங்களில் 'காறை' எனக் குறிப்பிடப்படுவது இவ்வூரே ஆகும். சப்தவிடங்கத் தலங்களில் இத்திருத்தலம் ஆதிவிடங்கத் தலம்.[1] இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்தினமலர் கோயில்கள் தளம் - அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில்
|
Portal di Ensiklopedia Dunia