திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்
பெயர்
பெயர்:திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாய்மூர் (திருக்குவளைக்கு அருகே)
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வாய்மூர்நாதர்
தாயார்:பாலின் நன்மொழியாள்,க்ஷீரோப வசனி
தல விருட்சம்:பலா
தீர்த்தம்:சூரிய தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 124ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. அப்பருக்கு இறைவன் "வாய்மூரில் இருப்போம் வா" என்று உணர்த்திய திருத்தலம்.இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான திருத்தலம்.

அமைப்பு

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன.[1]

இறைவன், இறைவி

இத்தலத்திலுள்ள இறைவன் வாய்மூர்நாதர், இறைவி பாலினும் நன்மொழியாள்.[1]

வழிபட்டோர்

பிரமன், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டுள்ளனர்.[2] வான்மீகநாதரும் வழிபட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya