புஞ்சை நற்றுணையப்பர் கோயில்
புஞ்சை நற்றுணையப்பர் கோயில் (Ponsei Natrunaiyappar Temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். அமைவிடம்இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ளது. பொன்செய் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் சோழர்கள் ஆண்ட தஞ்சை தரணியின் ஒரு பகுதியாகும். பெயர் காரணம்சோழப் பேரரசனான ராஜேந்திர சோழன், தந்தை ராஜராஜனின் ராஜராஜேச்சுரம் என்னும் தஞ்சை பிரகதீஸ்வரம் போன்ற கங்கை கொண்ட சோழீச்சுரத்தை, அரிய சிற்ப நுணுக்கங்களோடு படைத்தான். அதோடு இன்றைய மலேசிய நாட்டிலுள்ள பண்டைய ‘கெடா’ என்ற நகரத்தை வென்றதன் நினைவாக ‘கடாரங்கொண்ட சோழீச்சுரம்’ என்ற ஊரையும் சோழ நாட்டினில் உருவாக்கினான். இதனால் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘பூர்வதேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது. கடாரங்கொண்டான் என்பதே மருவி கிடாரங் கொண்டான் ஆகிவிட்டது. வேறு காரணங்கள்
கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப் பொழிப்புரை : கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும்
சிறப்புகள்
நற்றுணையப்பர் ஆலயம்
மூலவர் நற்றுணையப்பர் என்று அழைக்கப்படுகிறார். மனதில் உள்ள பயம் நீக்கி நல்வழிக்கு துணையாய் நிற்பவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இறைவியர்களாக மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி ஆகியோர் அருள் பாளிக்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் சொர்ண தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. சைவ திருமுறைகளிள் திருநனிபள்ளி ஈஸ்வரனை நோக்கி திருஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர் உள்ளிட்டோர்களால் பாடபெற்ற தேவார பாடல்கள் பன்னிரு திருமுறைகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. தேவார பாடல்கள் இடம்பெற்ற திருத்தலங்களில் நனிபள்ளியும் இன்றியமையாத ஒன்றாகும் சம்பந்தர் -காரைகள் கூகைமுல்லை. காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை இது போன்று 11 தேவாரப் பாடல்கள் திருநனிபள்ளி ஈஸ்வரனை நோக்கி திருஞானசம்பந்தர் அவர்களால் இரண்டாம் திருமுறையில் 74வது பதிகமாக(திருநனிப்பள்ளி) பாடப்பட்டுள்ளது.
முற்றுணை யாயி னானை மூவர்க்கும் முதல்வன் றன்னைச் இது போன்று 9 திருமுறை தேவாரப் பாடல்கள் திருநனிபள்ளி ஈஸ்வரனை நோக்கி அப்பர் அவர்களால் அருளப்பட்ட நான்காம் திருமுறையில் 70 வது பதிகமாக பாடப்பட்டுள்ளது. சுந்தரர் -ஆதியன் ஆதிரையன். ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய முதலிய பாடல்கள் திருநனிப்பள்ளியான இத்தலத்தில் சுந்தரர் அவர்கள் அருளிய ஏழாம் திருமுறையில் 97வது பதிகத்தில் 10 பாடல்கள் பாடப்பெற்றுள்ளது. தலத்தின் சிறப்புகள்
அமைப்புகிழக்கு நோக்கி அமைந்துள்ள, ராஜகோபுரம் இல்லாத, கோயில். விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபத்தை அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மலையான்மடந்தை அம்மன் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக இடப்புறம் பருதவராஜபுத்திரி சன்னதி உள்ளது. உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணை ஈஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் அகத்தியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி, விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய தலம். புள்ளமங்கை கோயிலில் உள்ளது போல கருவறையைச் சுற்றி மிகச்சிறிய சிற்பங்களைக் கொண்ட பெருமையுடையது இக்கோயிலாகும். திருவிழாஆண்டு தோறும் சித்திரை மாதம் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை சூரியன் சிவலிங்கத்தின் மேல் காலையில் தன் கதிரொளியை வீசும். அந்த நேரத்தில் சித்திரை திருவிழா கொண்டாடபடுகிறது. காலத்தை வென்று நிற்கும் இந்த சோழனின் கட்டிடக்கலை தமிழனின் பெருமைக்கு என்றும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கோவில் வரலாறுசுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில். இராஜராஜ சோழனின் மூதாதையரான முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-950) கட்டிய திருக்கோவில்களில் திரு நனிபள்ளி நற்றுணையப்பர் கோவிலும் ஒன்று. பொ.ஊ. 10ம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலாகும். கருவறையின் உள்ளே யானை சென்று வழிபாடு நடத்திய திருத்தலமாகும். யானை சென்று வழிபடும் அளவு கருவறையை உருவாக்குவது சோழனின் பார்போற்றும் கட்டிடகலை சிறப்பாகும்.
அடையும் வழிமயிலாடுதுறையிலிருந்து 13கிமீ தொலைவில் உள்ளது. பூம்புகார், திருவெண்காடு, பெருந்தோட்டம், மங்கைமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழியாக அடையலாம். சான்றுகள்
வெளி இணைப்புகள்
படத்தொகுப்பு
நுட்பமான சிற்பங்கள் படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia