திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்
திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் (வர்த்தமானீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 76ஆவது சிவத்தலமாகும். அமைவிடம்சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே அமைந்துள்ளது.[1] கோயிலுக்குள் கோயில்பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயிலின் மூலவரான அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் எனப்படும் திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயிலானது கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். வர்த்தமானீஸ்வரர் கோயில் சன்னதிக்குத் தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. அருகே சுவரில் ஞானசம்பந்தர் திருப்புகலூர் வர்த்தமானீசுரத்தைப் போற்றிப் பாடிய பதிகம் காணப்படுகிறது. இறைவன், இறைவிஇக்கோயிலில் உள்ள இறைவன் வர்த்தமானீஸ்வரர்,இறைவி மனோன்மணியம்மை. முருக நாயனார்இங்கு முருக நாயனாருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia