திருக்கோட்டியூர் நம்பி
ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய திருக்கோட்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார். பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த பெரியாழ்வருக்கு அடியவனான செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக இவர் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இராமானுசரின் ஐந்து ஆச்சாரியர்களில் இவரும் ஒருவர். தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும் தேவகிபிராட்டி எனும் ஒரே மகளையும் இராமானுசருக்கு சீடர்களாக்கியவர். சீடர்கள்
மற்ற பெயர்கள்
இராமானுசரும் நம்பிகளும்ஆளவந்தாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தைப் பற்றியும் தனக்கு பின்னர் மடத்தையும் சமயத்தையும் காக்க வரும் இராமானுசருக்கு இவற்றை உபதேசிக்கவும் அறிவுறுத்தியிருந்தார். ஆயினும் தகுதியற்றவர்க்கு இதைக் கற்பிக்ககூடாது எனவும் கூறியிருந்தார் ஆளவந்தார். எனவே இவரிடம் இராமானுசர் எட்டெழுத்து மந்திரத்தின் பொருளைக் கற்க வரும் பொழுது பதினெட்டு முறைகள் மறுத்து உடையவரின் தகுதியை சோதித்தபின்னரே கற்பித்தார். மேலும் இம்மந்திரம் பரம ரகசியம் என்றும், இதை "எவருக்கும் வெளியிடக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்டு உய்யும்படி, சாதி சமய பேதமற்று எல்லோருக்கும் உபதேசம் செய்தார் இராமானுசர். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடும் என்றும் கடிந்துக்கொண்டார். இதற்கு பதிலளிக்கும் வண்ணம் இராமானுசர் எல்லோரும் முக்தியடையவதாயின் தான் ஒருவன் நரகத்திற்குச் செல்வதும் தன்னுடைய பாக்கியமே என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே எம்பெருமானார் என்று மகிழ்ச்சியினால் ஆலிங்கனம் செய்துக்கொண்டார். அத்தோடு வைணவ வழிபாட்டு முறைக்கு அன்றிலிருந்து எம்பெருமானார் தரிசனம் என்று அழைக்கப்படும் என்றும் அருளினார் திருக்கோட்டியூர் நம்பி. சிறப்பு
தனியன்ஆச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன்:
|
Portal di Ensiklopedia Dunia