கௌடிய வைணவ மரபை நிறுவிய சைதன்யர்கௌடிய வைணவத்தின் பஞ்ச தத்துவ கடவுள்களின் விக்கிரங்கள், கௌடிய வைணவக் கோயில்: சைதன்ய மகாபிரபு, நித்தியானந்தர், அத்வைத ஆச்சாரியர், கதாதரர் மற்றும் சீனிவாசன்
கௌடிய வைணவம் (Gaudiya Vaishnavism), சைதன்ய வைணவம்,[1]ஹரே கிருஷ்ணா என்ற பெயர்களில் அழைக்கப்படும் வைணவப் பிரிவை கிழக்கிந்தியாவின், வங்காளம் மற்றும் ஒடிசாவில் நிறுவியர் சைதன்ய மகாபிரபு (பொ.ஊ. 1486–1534) ஆவார். வைஷ்ணவம் என்பற்கு விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வழிபடுபவர்கள் என்று பொருள். கௌடிய வைஷ்ணவத்தின் தத்துவங்கள் பகவத் கீதை மற்றும் பாகவத புராணத்தை அடிப்படையாகக் கொண்டது.
முழு முதற் கடவுளான கிருஷ்ணர் மீது பக்தி செலுத்துவதே, பிறவிச்சுழற்சியிலிருந்து விடுபடுதற்கான ஒரே வழி என கௌடிய வைணவத்தின் நம்பிக்கை ஆகும்.[2]
அசிந்திய-பேத-அபேதம்
அசிந்திய-பேத-அபேதம் (Achintya-Bheda-Abheda) எனும் வேதாந்த தத்துவத்தை கௌடிய வைணவம் கொண்டுள்ளது. இத்தத்துவத்தின் படி, பரம்பொருளான கிருஷ்ணர் அல்லது விஷ்ணு, வேறுபட்டவன் என்றோ அல்லது வேறுபடாதவன் என்றோ அறிவது அறிவுக்கு எட்டாதது என்பதே கௌடிய வைணவ மரபின் தத்துவம்.[3][4][5]
ஐந்து தத்துவங்கள்
பகவான் கிருஷ்ணரே சைதன்ய மகாபிரபுவாக அவதரித்துள்ளார். அவரே தலைமையானவர். (சுயம் பகவான்)
↑Kaviraja, K.G. Sri Caitanya-caritamrita. Bengali text, translation, and commentary by AC Bhaktivedanta Swami Prabhupada. Bhaktivedanta Book Trust.Madhya 20.108-109பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம் "It is the living entity's constitutional position to be an eternal servant of Krishna because he is the marginal energy of Krishna and a manifestation simultaneously one with and different from the Lord, like a molecular particle of sunshine or fire."
↑Kṛṣṇa Upaniṣad 1.25: ...na bhinnam. nā bhinnamābhirbhinno na vai vibhuḥ