திருநாவுக்கரசுதேவர் திரு ஏகாதசமாலைதிருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று. பட்டணத்துப் பிள்ளையார் திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் நூலைப் பாடியுள்ளார். அந்த ‘ஒருபா ஒருபது’ என்னும் சிற்றிலக்கியமே இவரது நூலில் ‘ஏகதசமாலை’ என்னும் வடசொல் ஆக்கப்பெயர் பூண்டு வருகிறது. திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி. இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் காணலாம். காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம். திருநாவுக்கரசுதேவர் என்பவர் திருநாவுக்கரசு நாயனார். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. இந்த நூல் அப்பர் புகழைப் பாடுகிறது. இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.
இந்த நூலில் 10 விருத்தப் பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக உள்ள ஒரு விருத்தம் இணைப்பும் பாடல் போல உள்ளது. பத்துப் பாடல்கள் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன. பத்தாம் பாடல் முடிவை முதல் பாடல் முதலோடு அந்தாதியாக முடியப்பட்டுள்ளதால் இதற்கு மாலை என்னும் பெயர் ஆகுபெயராகச் சூட்டப்பட்டுள்ளது.
நாவரசு 700 பதிகம் பாடியவர். சமணர் செய்த வாதைகள் (வதக்கும் செயல்கள்) எல்லாவற்றையும் திருவதிகைச் சிவனருளால் தீர்த்துக்கொண்டவர். இவரது திருவடிகளை வணங்கியவர் நிதியர் ஆகுவர், சீர்மை-உடையர் ஆகுவர், வாய்மை-நெறியர் ஆகுவர், பாதவெறியர் ஆகுவர், சாலவும் மதியர் ஆகுவர், ஈசன் அடியர் ஆகுவர், வானம் உடையர் ஆகுவர், பாரின் மனிதராகுவர் காலம் கணித்த கருவிநூல்
அடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia