தொட்டியம்
தொட்டியம் (ஆங்கிலம்:Thottiyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும். தேர்வு நிலை பேரூராட்சியும் ஆகும். அமைவிடம்திருச்சிக்கு 60 கி.மீ. தொலைவில் தொட்டியம் பேரூராட்சி உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 18 கி.மீ. தொலைவில் அமைந்த குளித்தலையில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு15.93 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி முசிறி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3926 வீடுகளும், 14909 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6] [7] பெயர்இவ்வூரின் பழைய பெயரானது கௌத்த ராஜநல்லூர் என்பது கல்வெட்டுகளினால் அறியவருகிறது. பிற்காலத்தில் இங்கு அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் குடியேறியதால் தொட்டியம் என்று பெயரால் அழைக்கபட்டது.[8] இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி .[9] இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு. மதுரகாளியம்மன் கோவில்மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாறு. இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துணை தெய்வங்கள் இருக்கின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia