நல்ல கள்வன்நல்ல கள்வன் (Penitent thief) அல்லது மனம் மாறிய கள்வன் என்பவர் லூக்கா நற்செய்தியில் பெயர் குறிப்பிடப்படாமல், சிலுவையில் இயேசு கிறித்துவின் இரு பக்கத்திலும் அறையப்பட்ட கள்வர்களுள் ஒருவராவார். பாரம்பரியப்படி இவரின் பெயர் புனித தீஸ்மாஸ் ஆகும்.[1][2][3][4] இவர் சிலுவையில் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி இயேசுவிடம் மன்னிப்பு பெற்று விண்ணகம் சென்றார் என்பது விவிலிய அடிப்படையில் கிறித்தவ நம்பிக்கை ஆகும். விவிலியத்தில்இயேசுவோடு அவரின் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை சிலுவைகளில் அறைந்தார்கள் என விவிலியம் கூறுகின்றது. (Matthew 27:38, Mark 15:27-28, Luke 23:33, John 19:18), இந்நிகழ்வை மாற்கு, ஏசாயா 53:12இல் உள்ள மறைநூல் வாக்கு நிறைவேறியதாக கூறுகின்றார். மத்தேயு இரண்டு கள்வர்களுமே இயேசுவை பழித்துரைத்ததாக கூறுகின்றார் (Matthew 27:44). ஆயினும் லூக்கா பின்வருமாறு இன்நிகழ்வை விவரிக்கின்றார்:
![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia