பெத்சாயிதாவின் பார்வையற்றவர்![]() பெத்சாயிதாவின் பார்வையற்றவர் என்பவர் இயேசுவின் செய்த புதுமையினால் கண் பார்வை பெற்ற ஒருவர் ஆவார். இவரைப்பற்றிய குறிப்பு மாற்கு 8:22-26இல் மட்டுமே உள்ளது.[1][2] மாற்கு நற்செய்தியின்படி இயேசு கிறிஸ்து கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊருக்கு வந்த போது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் குணமாக்க வேண்டினர். இயேசு பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார். பார்வையற்றவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். எனக் குறிக்கின்றது. மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia