பொந்தியு பிலாத்து
பொந்தியு பிலாத்து (/ˌpɒnti.əs ˈpaɪlət/,[4][5][6] இலத்தீனில்:Pontius Pilatus) என்பவர் கிபி. 26-36 வரை உரோமைப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யூதேயா பிரதேசத்தின் ஐந்தாம் ஆளுநராக இருந்தவர் ஆவார்.[7][8] இவர் திபேரியுஸ் அரசரின் ஆட்சிக்காலத்தில், இயேசு கிறித்துவின் வழக்கை விசாரித்து அவரை சிலுவையில் அறைந்து கொல்ல தீர்ப்பளித்ததால் மிகவும் அறியப்படுகின்றார். பிலாத்து கல்வெட்டின் கண்டு பிடிப்பால் இவர் வரலாற்றில் வாழ்ந்த நபர் என்பது உறுதியானது. இக்கல்வெட்டோடு நான்கு நற்செய்திகள், நிக்கதேம் நற்செய்தி, மார்சியோன் நற்செய்தி மற்றும் ஜொசிபெசின் குறிப்புகளால் இவரைக்குறித்த செய்திகள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து இவர் பொந்தியு குடும்பத்தை சேர்ந்த உரோமை வீரர் எனவும் வெலேரியுஸ் கிராதியுஸுக்கு அடுத்து யூதேயாவின் ஆளுனராக கி.பி 26இல் பதவி ஏற்றார் எனவும் தெரிகின்றது. இவரின் ஆட்சிகாலத்தில் சாமாரியர்கள் செய்த கிளர்ச்சியை அடக்க முனைந்த போது யூத சமயத்தினரின் மனம் நோகும்படி நடந்ததால், இவரை உரோமைப்பேரரசர் அழைத்து கண்டித்து பதவியிலிருந்து நீக்கியதாக ஜொசிபெஸ் குறிக்கின்றார்.[9] இவருக்குப்பின்பு மார்செலுஸ் ஆட்சி செய்தார். நான்கு நற்செய்தி நூல்களும் இவர் இயேசுவை விடுவிக்க முயன்றதாக குறிக்கின்றது. இவரின் முயற்சி தோற்றதால் இயேசுவின் இறப்புக்கு தான் பொருப்பல்ல என கைகழுவியதாக மத்தேயு நற்செய்தி குறிக்கின்றது. மாற்கு நற்செய்தி, தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் இயேசுவை தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்று பிலாத்து உணர்ந்திருந்ததாகவும்,[10] லூக்கா நற்செய்தியில் ஏரோதுவேடு பிலாத்தும் இயேசுவில் குற்றம் காணவில்லை எனவும்,[10] யோவான் நற்செய்தியில் பிலாத்து "பாருங்கள். அவனிடம் (இயேசுவிடம்) நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்று அறிக்கையிட்டதாகவும் குறிப்பிடுகின்றது.[11] எணினும் பிலாத்து யூதர்களுக்கு பயந்து இயேசுவை கொல்ல அவர்களுக்கு அனுமதியளித்ததாக கூறுகின்றது. குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia