பாக்யோங் மாவட்டம்
பாக்யோங் மாவட்டம் (Pakyong district) என்பது இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது பாக்யோங் நகரிலிருந்து நிர்வகிக்கப்படுகிறது.[2] கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் மூன்று உட்பிரிவுகளான பாக்யோங், ரங்க்போ, ரோங்லி உட்பிரிவுகள் 2021ஆம் ஆண்டில் ஒன்றிணைக்கப்பட்டு புதிய மாவட்டமாக பாக்யோங் உருவாக்கப்பட்டது.[3] முன்னாள் மாவட்டத்தின் மீதமுள்ள கேங்டாக் கேங்டாக் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. இது இப்போது வடமேற்கில் உள்ள பாக்யோங் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த மாவட்டம் இப்போது மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டம், பூட்டான், சீனா, சிக்கிமின் நாம்சி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது. மக்கள்தொகை![]() ![]() பாக்யோங் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 404 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 74,583 ஆகும்.[4] போக்குவரத்துசாலை![]() பாக்யோங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் பின்வருமாறு:
![]() தொடருந்துதொடருந்து சேவையினை பொறுத்தமட்டில் பணிகள் கட்டுமான நிலையில் உள்ளது. சியோக்-ராங்போ தொடருந்து பாதை பாக்யோங் மாவட்டத்தில் உள்ள ராங்போ நகரில் முடிவடையும். இதனை கேங்டாக் வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வானூர்திசிக்கிமின் ஒரே வானூர்தி நிலையமான பாக்யோங் வானூர்தி நிலையம் பாக்யோங் மாவட்டத்தின் தலைமையகமான பாக்யோங்கில் அமைந்துள்ளது. ![]() ![]() சட்டமன்ற தொகுதிகள்![]() பாக்யோங் மாவட்டத்தின் சிக்கிம் மாநிலத்தின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
முக்கியமான நகரங்கள்![]() பாக்யோங் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்
![]() காட்டுயிர் காப்பகங்கள்![]() பங்கோலாகா வனவிலங்கு சரணாலயம் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வட வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தின் நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, அரிதார் முல்கர்கா ரேச்சேலா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுமின் காப்புக் காடுகளும் சரம்சா தோட்டமும் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குப் பல்வேறு வகையான மலர் தாவரங்களும் விலங்குகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. ![]() தாவரங்களும் விலங்குகளும்![]() ![]() பாக்யோங் மாவட்டத்தில் பல்வேறு வகையான தாவரங்களும் வனவிலங்குகளும் காணப்படுகின்றன. முக்கியமான விலங்குகளாக மாநில விலங்கான சிவப்பு பாண்டா, மாநில பறவையான டென்ட்ரோபியம் நோபில் மாநில மலர், ரோடோடென்ட்ரான் மாநில மரம் பாக்யோங் மாவட்டத்தின் வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுகின்றன. ![]() ![]() பிற முக்கியமான காட்டு விலங்குகளில் பனிச்சிறுத்தை, இமயமலை கருப்புக் கரடி, மேகச் சிறுத்தை, பெரிய இந்திய புனுகுப் பூனை போன்றவை அடங்கும்.[7] சிக்கிம் அரசின் வனத்துறை, பாக்யோங் மாவட்டத்தின் பங்கோலகா வனவிலங்கு சரணாலயத்தில் 2019 சனவரியில் வங்காளப் புலி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ![]() ![]() ஆறுகளும் ஏரிகளும்ஆறுகள்![]() மாநிலத்தின் மிகப்பெரிய ஆறான தீஸ்தா ஆறு பாக்யோங் மாவட்டத்தில் சிங்தாமிலிருந்து ராங்க்போ வரை பாய்கிறது. சிக்கிமின் மூன்றாவது பெரிய ஆறாக விளங்கும் ரங்க்போ ஆறு, பாக்யோங் மாவட்டத்தின் ரோங்லி துணைப்பிரிவில் உள்ள மென்மேசோ ஏரியிலிருந்து உருவாகி, பாக்யோன்ங் துணைப்பிரிவு, ரோங்லி உட்பிரிவு கிராமங்கள், பாக்யோன் மாவட்டத்தின் நகரங்கள் வழியாகப் பாய்கிறது. பாக்யோங் மாவட்டத்தில் உள்ள துசுலுக் அருகே உருவாகி பூட்டான், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் நோக்கிப் பாயும் ஜல்தாகா ஆறு. பாக்யோங் மாவட்டத்தின் பிற முக்கிய ஆறுகள் ரிச்சு கோலா, ரோங்லி கோலா, பாச்சே கோலா, ரேசி கோலா ஆகும். ஏரிகள்![]() ![]() பாக்யோங் மாவட்டத்தின் முக்கிய ஏரிகள்
விளையாட்டு![]() பாக்யோங் மாவட்டத்தின் இராங்க்போவில் அமைந்துள்ள சுரங்கத் துடுப்பாட்ட மைதானம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய துடுப்பாட்ட மைதானம் ஆகும். சிக்கிம் துடுப்பாட்டச் சங்கத்திற்குச் சொந்தமான இந்த மைதானத்தில் ரஞ்சிக் கோப்பை, சி. கே. நாயுடு கோப்பை, கூச் பெகார் கோப்பை, விஜய் மெர்ச்சன்ட் கோப்பை போன்ற முக்கியமான துடுப்பாட்டக் கோப்பைகளுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.[8][9] பாக்யோங் மாவட்டத்தின் பிற முக்கிய விளையாட்டு மைதானங்கள் தூய சவேரியார் கால்பந்து மைதானம்-பாக்யோங், ரோங்லி மேளா மைதானம், ரெனாக் எஸ்எஸ்எஸ் மைதானம். சுஜாச்சென் எஸ்எஸ்எஸ் மைதானம், மத்திய பெண்டம் எஸ்எஸ்எஸ் மைதாவு போன்றவை ஆகும். கல்வி![]() பாக்யோங் மாவட்டத்தில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
சாதனைகள்![]()
படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia