சிக்கிம் இராச்சியம் (Kingdom of Sikkim), கிழக்கு இமயமலை பகுதியில் அமைந்த இவ்விராச்சியத்தை, திபெத்தின்சோக்கியால் வம்ச மன்னர்களால் பரம்பரையாக கிபி 1642 முதல் 16 மே 1975 முடிய ஆளப்பட்டது.[3]
பிரித்தானிய மற்றும் இந்தியாவின் காப்பரசாக சிக்கிம் இராச்சியம்
1861ல் சிக்கிம் மன்னருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட தும்லோங் உடன்படிக்கையின் படி, சிக்கிம் இராச்சியம், ஆங்கிலேயர்களின் காப்பரசாக 1861 முதல் 1947 முடிய செயல்பட்டது. பின்னர் தன்னாட்சி உரிமையுடன் ஆண்ட சிக்கிம் இராச்சியம், 1950 முதல் இந்தியாவின் காப்பரசாக விளங்கியது.[5]
இந்தியாவுடன் இணைத்தல்
1975 இல், சிக்கிமில் உள்ள நேபாள இந்துக்களுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன இதைத் தொடர்ந்து சிக்கிம் மன்னருக்கு எதிராக நேபாள மக்கள் கோபமுற்றனர்.[6][7] அவர்களது தூண்டுதலால், இந்தியத் தரைப்படைகாங்டாக்கிற்குள் நுழைந்தது. தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையில் சுனந்த கே. தத்தா ரேயின் கூற்றுப்படி, அரண்மனை காவலர்களைக் கொன்ற இந்திய இராணுவம் 1975 ஏப்ரலில் அரண்மனையை சூழ்ந்தது.[5]
மன்னராட்சியின் ஆதரவாளர்கள் நிராயுதபாணியாக்கப்பட்ட பிறகு, முடியாட்சி தேவையா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் சிக்கிம் மக்கள் மன்னராட்சியை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர், இதைத் தொடர்ந்து காக்கி லீந்தப் தோர்ஜி தலைமையிலான சிக்கிமின் புதிய பாராளுமன்றத்தின் கோரிக்கைப்படி சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாக இந்திய அரசாங்கத்தால் உடனடியாக இணைத்துக்கொள்ளப்பட்டது.[5][8]
பண்பாட்டு மற்றும் சமயம்
சிக்கிம் இராச்சியத்தின் முதல் மன்னர் திபெத்திலிருந்து வந்ததால், பண்பாடு மற்றும் மத விடயங்களில் சிக்கிம் இராச்சிய மக்கள், திபெத்திய முறையை பயில்கின்றனர். நேபாள இன மக்கள் சிக்கிமில் அதிகம் வாழ்வதால், இந்து பண்பாடும் பயிலப்படுகிறது.
சிக்கிம் இராச்சிய மன்னர்கள் 1642–1975
சிக்கிம் இராச்சியத்தை 1642 முதல் 1975 முடிய ஆண்ட சோக்கியால்கள்:
இவரின் மாற்றாந்தாய் மகன் பெண்டியோன்குமுவின் அச்சுறுத்தலின் பேரில், சோக்தோர் நம்கியால், லாசால் அடைக்கலம் அடைந்தார். திபெத்தியப் பேரரசு இவரை மீண்டும் சிக்கிம் இராச்சியத்தின் மன்னராக்கினர்.
சிக்கிமின் தலைநகரம் ரப்டென்சேவை நேபாளிகள் முற்றுகையிட்டனர்.
6
1780–1793
டென்சிங் நம்கியால் (1769–1793)
நேபாளிகள், மன்னர் டென்சிங் நம்கியாலை திபெத்திற்கு நாடு கடத்தினர். பின்னர் அங்கேயே இறந்தார்.
7
1793–1863
சுக்புத் நம்கியால் (1785–1863)
சிக்கிம் இராச்சியத்தை நீண்ட காலம் ஆண்டவார். தலைநகரத்தை ரப்டென்சேவிலிருந்து தும்லோங் நகரத்திற்கு மாற்றினார்.
1817ல் சிக்கிம் மன்னரும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரும் செய்து கொண்ட திதாலியா உடன்படிக்கையின் படி, நேபாளிகள் கைப்பற்றியிருந்த, சிக்கிம் இராச்சியத்தின் மேற்கு பகுதிகள், மீண்டும் சிக்கிம் இராச்சியத்திற்கு வழங்கப்பட்டது. 1835ல் சிக்கிம் இராச்சியத்தினர் தங்களது டார்ஜிலிங் பகுதியை, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
8
1863–1874
சித்கியோங் நம்கியால் (1819–1874)
9
1874–1914
துடோப் நம்கியால் (1860–1914)
1889ல் சிக்கிம் நாட்டு அரசவையில் ஆலோசனை வழங்க, பிரித்தானிய இந்தியா அரசு ஜான் கிளொட் ஒயிட் எனும் ஆங்கிலேய அரசியல் அலுவலரை நியமித்தனர். 1894ல் தலைநகரத்தை தும்லோங்கிலிருந்து கேங்டாக்கிற்கு மாற்றப்பட்டது.
10
1914
சித்கியோங் துல்கு நம்கியால் (1879–1914)
குறுகிய காலம் மன்னர். 35வது வயதில் மாரடைப்பால் 5 டிசம்பர் 1914ல் காலமானார்.
11
1914–1963
தஷி நம்கியால் (1893–1963)
1950ல் இந்தியா - சிக்கிம் உடன்படிக்கையின் படி, சிக்கிம் எல்லைகளை காக்க இந்தியா உதவ முன்வந்தது.
12
1963–1975
பால்தென் தொண்டுப் நம்கியால் (1923–1982)
சிக்கிம் இராச்சியத்தின் இறுதி மன்னர். 1975ல் சிக்கிமில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் படி, சிக்கிம் இராச்சியம் 16 மே 1975ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. சிக்கிம் இந்திய மாநிலத் தகுதி பெற்றது.