தேசிய நெடுஞ்சாலை 717அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 717அ, பொதுவாக தே. நெ. 717அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும். இது இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.[1][2] தேசிய நெடுஞ்சாலை 717அ தேசிய நெடுஞ்சாலை 17-இல் பாக்ராகோட்டில் தொடங்கி கேங்டாக்கில் முடிவடைகிறது.[3] தே. நெ-717அ இந்தியாவின் மேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இது மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டம், கலிம்போங் மாவட்டம், சிக்கிமில் உள்ள பாக்யோங் மாவட்டம், கேங்டாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் இந்த நெடுஞ்சாலையை நிறுவி பராமரித்து வருகிறது.[2][4] வழித்தடம்
பாக்ராகோட்-லாபா-அல்காரா-பெடோங்-கட்டாரே-மேற்கு வங்கம் சிக்கிம் ரேஷி எல்லை.[1]
மேற்கு வங்காள சிக்கிம் ரேஷி எல்லை-ரெனாக்-ரோரதாங்-பாக்யோங் விமான நிலையம்-பாக்யோன் பஜார்-ராணிபூல்-கேங்டாக். [1] சந்திப்புகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia