பினாங்கு மாநில ஆட்சிக்குழு
பினாங்கு மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Penang State Executive Council; மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Pulau Pinang) என்பது மலேசியா பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். பினாங்கு ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட பினாங்கு முதலமைச்சர் (Chief Minister of Penang) இந்த ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் (Penang State Legislative Assembly) பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். இந்த ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன. ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பினாங்கு முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பினாங்கு ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள். ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை, மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள். அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்
உறுப்பினர்களின் பட்டியல்சாவ் கொன் யாவ் II ஆட்சிக்குழு
13 ஆகஸ்டு 2023 முதல் உறுப்பினர்கள்: :[4]
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia